»   »  ‘அத்திப்பூக்கள்’ வில்லி ‘மகா’, நிஜத்தில் மகா அமைதியாம்!

‘அத்திப்பூக்கள்’ வில்லி ‘மகா’, நிஜத்தில் மகா அமைதியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Anjali
மத்தியான நேரத்தில் சாப்பிட்டு விட்டு குட்டி தூக்கம் போடுவது பெரும்பாலான இல்லத்தரசிகளின் வேலை. அந்த குட்டித்தூக்கத்தையும் சில வருடங்களாக கெடுத்துவிட்டது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அத்திப்பூக்கள் சீரியல். அதில் கணவரின் தங்கையின் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அண்ணி கதாபாத்திரமான அஞ்சலியை சபிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் பாதிக்கும் கதாபாத்திரம் அது.

வில்லியை விட வில்லிக்கு தூபம் போடும் சைடு கதாபாத்திரங்களும் பிரபலமாக பேசப்படுவதுண்டு அந்த வகையில் அஞ்சலிக்கு அடுத்த வில்லியாக உள்ள 'மகா' கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. சதிகாரர்களை விட சதிக்கு துணை புரியும் 'மகா' ( இனியா) வைத்தான் இன்றைக்கு நாம் சந்திக்கப் போகிறோம்.

சீரியலில் ஒரு வில்லியை சமாளிப்பதே பெரிய விசயம் அதுவும் இரண்டு வில்லிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அழுகையும், ஆர்பட்டமும்தான். சீரியலில் வில்லியாக நடித்தாலும் நிஜத்தில் அனைவருமே நண்பர்கள்தான் என்கிறார் இனியா.

நடிகை சச்சுவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் இந்த இனியா. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதானாம். பிரியா விஷனில் கல்யாண கலாட்டா சீரியலை வேடிக்கை பார்க்க போன போது திடீரென்று இவரும் நடிகையாகிவிட்டார். அது முதல் அத்திப்பூக்கள் வரை தொடர்கிறது சீரியல் பயணம்.

அத்திப்பூக்களில் வில்லி என்றாலும் 'உறவுக்கு கை கொடுப்போம்' சீரியலில் மென்மையான அமைதியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் கேரக்டரே அதுதான் என்கிறார் இனியா.

அதனால இந்தத் தொடரில் நடிக்கிறேன் என்று சொல்வதைவிட வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

இனியாவின் கணவர் மாறன் பிஸினஸ்மேன். அவருடைய ஆதரவும், மாமியாரின் ஆதரவும் எப்போதும் உண்டாம் இனியாவிற்கு.

வாழ்த்துக்கள் இனியா, நல்லா வில்லத்தனம் பண்ணுங்க !

English summary
'Athipookkal Maha', a mega villi in reel life only. Iniya, who is donning the villy role in the serial telecasted by Sun TV is very calm in nature. But in Athipookal she is playing a negative role.
Please Wait while comments are loading...