For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Azhagu serial: சீரியல்கார் சீரியல்கார்.. ஏன் இந்த விபரீத சீன்ஸ்.. தவிர்க்கலாமே??

|

சென்னை: வர வர இந்த சீரியல் கில்லர்கள் தொல்லை தாங்க முடியலை.. மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கெட்ட விஷயங்களையும் ஈஸியாக கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.

சன் டிவியின் அழகு சீரியலில் அப்படி ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் பகீர் என்றும் இருந்தது. அந்த சீனை எழுதியவருக்கு இது தோன்றியதா என்பதுதான் நமது சந்தேகமாக உள்ளது.

ஒரு வேளை அவருக்கும் அது தோன்றியிருந்தால் நிச்சயம் அதை தவிர்த்திருப்பார் அல்லது லேசுபாசாக காட்டியிருக்க முயற்சித்திருப்பார். ஆனால் எதையுமே அவர் செய்யவில்லை என்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது. சரி விஷயத்துக்கு வருவோம்.

 வாடகை வண்டி

வாடகை வண்டி

இந்த சீரியலோட அழகம்மை குடும்பத்தினர் ஒரு வாடகை சைக்கிளை.. ஸாரி.. வாடகை வண்டியை பிடித்துக் கொண்டு மலை மேல இருக்கும் கோயிலுக்கு குடும்பத்தோட கிளம்பிப் போறாங்க. நிறைமாத கர்ப்பிணி ஐஸ்வர்யாவுக்கு வயித்து வலி வந்துட்டதால அழகம்மையும், பழனிச்சாமி வாத்தியாரும் பின்னால வர்றோம்னு சொல்லிட்டு இவங்களை முன்னால போக சொல்லிடறாங்க.

லைவ்

லைவ்

அழகம்மையின் மொத்த குடும்பமும் கிளம்ப புது மணப்பெண் காவ்யாவும், மதனும் கூட கிளம்பறாங்க. இந்த இடத்தில்தான் இளைஞர்களை டச் பண்ணியிருக்கிறார் டைரக்டர். பசங்களுக்கு ஃபேஸ்புக்ல லைவ் போடறது ஒரு ஜாலி அடிக்ட். அதை இதில் செருகியிருக்கிறார்கள். திருநா என்ன செய்கிறான். தன் உடலை வேனுக்கு வெளியே நீட்டி, மலைப் பாதையில் வேன் போவதை லைவா காமிக்கறான்.

 மறுபடியும் மறுபடியும்

மறுபடியும் மறுபடியும்

இதை ஒரு தடவை காட்டினால் பரவாயில்லை. மறுபடியும் காட்டுகிறார்கள். இங்கேதான் நம்ம கவலை ஆரம்பமாகிறது. இதுபோன்ற காட்சிகள் தத்ரூபமாக காட்டியேதான் ஆக வேண்டுமா.. பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா என்று நமக்கு மனதில் கேள்வி எழுகிறது. செல்பி எடுத்து செத்துப் போன கதைகள் இப்போது அன்றாட செய்திகளாகி வருகின்றன. அப்படி இருக்கும்போது இப்படியும் செல்பி எடுக்கலாமே என்று விபரீதமான ஒரு செயலை இந்த சீரியலில் இந்த எபிசோடில் தெளிவாக காட்டி நம்மை அதிர வைக்கின்றனர்.

 நண்டு சிறுசு

நண்டு சிறுசு

இப்போதெல்லாம் செல்பி எடுப்பதில் பொண்டு பொடுசு, நண்டு சிறுசு என யாரும் பாரபட்சம் இல்லை. மாறாக செல்போன் இருந்தால் போதும் செல்பிகளை குவித்து விடுகிறார்கள். அதிலும் சிறார்கள்தான் விபரீத செயல்களை அதிகம் செய்பவர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில், இப்படியாப்பட்ட காட்சிகளை வைத்தால் எப்படிங்க பாஸ்.. பார்க்கும் சிறார்கள், இளசுகள்.. அடடா இது செமையா இருக்கே என்று வேன் ஜன்னல் வழியாக தலையை விட்டு, பாடியை நுழைத்து பகீர் செல்பிகளை எடுத்து பரிதாபமாக பொட்டென்று அடிபட்டு செத்துப் போனால் என்னாகும்.. படிக்கவே பயமா இருக்கே.. நடந்துச்சுன்னா.

பார்க்கலாம்... என்ன நடக்குதுன்னு....

 வாகனம் ரிப்பேராகி விடுகிறதாம்

வாகனம் ரிப்பேராகி விடுகிறதாம்

அதே மாதிரி இன்னொரு சீன். மலை மேல் போன வாகனம் ரிப்பேராகி விடுகிறதாம். வண்டி சரியில்லாத கண்டிஷனில் இருக்கும்போது என்னாத்துக்கு அதை எடுத்துட்டு மலை மேலே ஏறணும் என்று தெரியவில்லை. இங்கேயும் லாஜிக் சரியில்லை. சீன் கிரியேஷன், பதட்டத்துக்காக இப்படியாப்பட்ட காட்சிகளை வைத்துள்ளனர் போலும்.

 டெய்லி பிபி தான் ஏறும்

டெய்லி பிபி தான் ஏறும்

பணம் இன்னிக்கு வரும்..நாளைக்கு போகும்.. உன் உசிரு.. உன்னை நம்பி வரவங்க உசுரு வருமா? நினைச்ச மாதிரியே வேன் பிரேக் பிடிக்காம பள்ளத்துல விழுந்துடுது. ஆளுக்கு ஒரு பக்கமா கிடந்து கத்தறாங்க... ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியலை. ரத்த காயம் வேற. ஜாலியா பார்க்க வேண்டிய சீரியலை இப்படி உச்சு கொட்டி பரிதாபமாக பார்த்தால் டெய்லி பிபி தான் ஏறும் சாரே.

சோகத்தை குறைங்க.. பதட்டத்தை நீக்குங்க.. ஜாலியை அதிகரிங்க.. குடும்பங்களை குதூகலமாக வச்சிக்கிற மாதிரி சீன் ரெடி பண்ணுங்க.. டெவலப் ஆகுங்க சீரியல்கார்!.

English summary
Sun TV's azhagu serial on the hill with a family van in a private van.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more