Just In
- 39 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
azhagu serial: மடிப்பிச்சை எடுத்து... தாலி வாங்கி... கடைசியில் உண்டியலில் போடவா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சுதா புருஷன் இன்கம்டாக்ஸ் ஆஃபீசில் வேலை பார்க்கிறான். அவனை பூர்ணா மாட்டிவிட்டு விடுகிறாள், இதை கண்டு பிடிக்கத் தெரியாத சுதா, புருஷனுக்காக போராடுகிறாள். கடைசியில் புருஷனை எங்கு வச்சு விசாரிக்கறாங்கன்னு சுதாவுக்குத் தெரியலையாம்.
கோயில் வாசலில் இருந்த ஒரு அம்மா மடிப்பிச்சை எடுத்து, கோயில் உண்டியலில் போட்டா உன் புருஷன் இருக்கும் இடம் தெரிஞ்சுரும்னு சொல்ல, சுதா மடிப்பிச்சை எடுக்கிறாள். அதை ஒருத்தன் திருடிக்கிட்டு ஓடிடறானாம். அப்போதும் சுதாவுக்கு பூர்ணா மீது சந்தேகமே வரல.
அழுதுகிட்டு நடு ரோட்டில் உட்கார்ந்துட, அவங்கம்மா சகுந்தலா தேவி வந்து மொத்த தொகையும் மடிப்பிச்சையா போட, அதில் தாலி வாங்கி உண்டியலில் போட்ட அடுத்த நொடியே கமிஷனர் போன் செய்து சுதா புருஷனை விசாரிக்கும் இடத்தை சொல்லிடறார். பாவம் கமிஷனருக்கு வேற வேலையே இல்லை பாருங்க!

அழகுக்கு வந்த சோதனை
இப்படி மேற்சொன்ன சிறு பிள்ளைத்தனமான கதையில் அழகு சீரியலை கொண்டு போறாங்க. என்னடா இது அழகு சீரியலுக்கு வந்த சோதனைன்னு தலையில் அடிச்சுக்காத குறைதான். வீட்டில் இருக்கும் தங்கச்சி என் காலில் விழு சுதா.. நான் ரவி அத்தானை காப்பாத்தி தரேன்னு சொல்றா. அவ மேல் ஒரு சந்தேகமும் வரலை சுதாவுக்கு. உதவிக்கு தி கிரேட் லாயர் அம்மா சகுந்தலா தேவி இருந்தும் அவங்க உதவியை சுதா நாடலை.
செம போதை போல.. நைட் டிரெஸில் ஹாயாய் போட்டோ போட்ட பிரபல நடிகை.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

விசாரிக்கும் இடம்
சுதாவின் புருஷன் ரவியை லஞ்சம் வாங்கின குற்றச்சாட்டில் போலீஸ் விசாரணை நடக்குது. அந்த இடம் தெரியணும்னு என்ன அவசியம்? அல்லது அப்படி தெரியாமல் எந்த இடத்தில் வச்சு விசாரிச்சால்தான் என்ன? ஒரு லாயரா இருந்து அவனை விசாரிக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் மடிப்பிச்சையாம்.. அதிலும் தாலி வாங்கணுமாம்.. அதையும் கோயில் உண்டியலில் போடணுமாம்.. என்னங்க அழகு சீரியலுக்கு வந்த சோதனை.

கேவலமா இருக்கு விலகிருங்க
அழகு சீரியல் கதை ரொம்ப கேவலமா இருக்கு. நடிகை ரேவதி இந்த சீரியலில் நடிக்கவே வேணாம்.. ரேவதி பிளீஸ் விலகிருங்க என்று ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்து இருக்காங்க. கதைன்னா கூட ஒரு நியாயம் வேணாமா? எதுக்கு வீணா மடிப்பிச்சை எடுக்கணும்... அழகு சீரியல் ஆரம்பிச்சு மாலை 6:30 மணி ரேட்டிங்கை பிடித்தது வேஸ்ட்.

ரசிகர்களைத் தக்க வைக்க
அழகு சீரியல் 6:30 மணி நேரத்தில் ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டு வச்சு இருந்தது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு சுதா கதாபாத்திரத்தின் நிலைமை ஆகிப் போச்சு. அழகம்மை ரேவதியும் சீரியலில் இல்லாமல், பெரிய மைனஸா இப்போ பார்க்கப்படுது. தேவை இல்லாமல் கதையை கேவலமா இழுக்க சீரியல் இயக்குநர்களால் மட்டுமே முடியும்.