ஏமாற்றப்படும் லட்சங்கள்... என்ன செய்ய போகிறார் பாக்யலட்சுமி?

சென்னை: விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் மனம் கவர்ந்த இந்த சீரியல் அடுத்தடுத்த, திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக கொண்டு செல்லப்படுகிறது.

வீட்டாரின் எதிர்ப்பு மற்றும் கேலிகள், பல கட்ட தடைகளை தாண்டி 1000 பேருக்கான சமையல் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் பாக்யலட்சுமி. இதனால் சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் பாக்யாவிற்கு, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக பணம் கொடுக்கிறார் தொழிலதிபர் ராஜசேகர். இதற்கிடையில் சமையல் செய்து கொடுத்தவர்கள் பணம் கேட்டு பாக்யாவிற்கு நெருக்கடி தருகிறார்கள்.

பாக்யாவின் அக்கவுண்டிற்கு ரூ.3 லட்சத்தை அனுப்புகிறார் ராஜசேகரின் பிஏ. நாளை பணம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாக்யா, 3 லட்சத்தையும் முழுவதுமாக கையில் வாங்கி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ஓகே சொல்கிறார் மகன் எழில். இப்படியாக கடந்த வார எபிசோட் நிறைவடைந்தது.

ஏமாறும் பாக்யலட்சுமி

ஏமாறும் பாக்யலட்சுமி

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அக்கம் பக்கத்தினர் பணம் கேட்பதாக பாக்யாவிடம் சொல்கிறாள் செல்வி. இன்று பணம் வந்ததும் கொடுத்து விடலாம் என சொல்லும் பாக்யாவிற்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசும் வட மாநில நபர், உங்கள் அக்கவுண்ட் பிளாக் ஆகி இருக்கு. உங்க ஏடிஎம் கார்டு நம்பரையும், போனிற்கு வரும் ஓடிபி நம்பரையும் சொல்லுங்கள் என கேட்கிறார்.

பறிபோகும் லட்சங்கள்

பறிபோகும் லட்சங்கள்

விபரம் புரியாமல் அந்த நபர் கேட்கும் விபரங்களை கொடுத்து விடுகிறார் பாக்யா. மறுநாள் மகன் எழிலுடன் பேங்கிற்கு போகும் பாக்யாவிடம், அக்கவுண்டில் பணம் இல்லை என்கிறார் வங்கியில் வேலை செய்பவர். இதனால் அதிர்ந்து போகிறார் பாக்யா. இப்படியாக இந்த வார ப்ரோமோ முடிகிறது.

நெருக்கடியில் பாக்யா

நெருக்கடியில் பாக்யா

மளிகை பொருள், சமையல் பாத்திரம் வாங்கும் கடைகளில் இரண்டு நாட்களில் பணம் வந்ததும் தருவதாக கூறி உதவி கேட்டு தான் 1000 பேருக்கான சமையல் ஆர்டரை செய்து முடிப்பார் பாக்யா. சமையல் செய்து கொடுத்தவர்களிடமும், வேலை முடிந்ததும் பணம் கிடைக்கும், அடுத்த நாளே அனைவருக்கும் தருவதாக கூறுகிறார் பாக்யா.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

ஆனால் எதிர்பாராத விதமாக மோசடி போன் காலால் 3 லட்சம் பணத்தை தொலைத்து விடுகிறார் பாக்யா. இதனால் அடுத்து என்ன நடக்கும், வரப் போகும் நெருக்கடிகளை பாக்யா எப்படி சமாளிப்பார், ஏமாற்றப்பட்ட பணம் பாக்யாவிற்கு திரும்ப கிடைக்குமா என பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த ப்ரோமோவால் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எப்படி சமாளிப்பார் பாக்யா

எப்படி சமாளிப்பார் பாக்யா

மற்றவர்களை விடுங்கள் கணவர் கோபியை பாக்யா எப்படி சமாளிக்க போகிறார். ஏற்கனவே சாபம் விடுவதை போல், இந்த ஆர்டரால் நீ பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள போகிறாய் என ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவர் கோபி. அவர் கூறியதற்கு ஏற்றாற் போல் நடந்துள்ளதே என நெட்டிசன்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இந்த காலத்தில் இப்படி உலகம் தெரியாதவராகவா பாக்யா இருப்பார் என பலர் கேட்டு வருகிறார்கள்.

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

எப்போதும் ஹீரோயினுக்கு கஷ்டம் வருகிற மாதிரி தான் சீரியல் எல்லாம் எடுப்பீங்களா. அவங்க சந்தோஷமா இருக்குறத போல தொடர்ந்து ஒரு வார எபிசோட் கூட காட்ட மாட்டீங்களா. இன்னும் எத்தனை பிரச்சனைகளை வைத்து சீரியலை இன்னும் இழுக்க போகிறீர்கள் என பலர் கமெண்டில் விளாசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X