»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: டிவி சீரியலாக வரும் பாகுபலி

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: டிவி சீரியலாக வரும் பாகுபலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படம் தொலைக்காட்சி தொடராக வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் உலக அளவில் வசூலில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

Baahubali to be made as Television series

பாகுபலி 2ம் வசூலில் நிச்சயம் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தை தொலைக்காட்சி தொடராக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து பாகுபலி பட தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா கூறுகையில்,

பாகுபலியை டிவி தொடராக வெளியிடுவது குறித்து பணிகள் நடந்து வருகிறது. அதை யார் ஒளிபரப்பப் போகிறார்கள் உள்ளிட்ட எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாகுபலி 2 ரிலீஸுக்கு பிறகு இது நடக்கும் என்றார்.

English summary
Super hit movie Baahubali's story is going to be adapted for a television series. This will happen after the release of Baahubali 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil