Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
காதல் விவகாரத்தில் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி... அடுத்தடுத்து பரபரப்பில் பாக்கியலட்சுமி தொடர்!
சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடராக சமீப காலங்களில் மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.
இந்தத் தொடரில் தன்னுடைய காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க கோபி பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?

விஜய் டிவி
விஜய் டிவியின் முக்கியமான தொடர்கள் என்றால் அது பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்டவைதான். இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி -பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா இடையிலான உறவை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கோபியின் காதல் விவகாரம்
தன்னுடைய காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டு வருகிறார் கோபி. இதையடுத்து அவர் செய்யும் பல தகிடுதத்தங்களை தெரிந்துக் கொள்ளாமல் அப்பாவியாக இருக்கிறார் பாக்கியலட்சுமி. அவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கோபி.

கோபி வீட்டிற்கு வரும் ராதிகா
இந்நிலையில் ராமமூர்த்தியின் 75வது பிறந்தநாளையொட்டி பாக்கியலட்சுமியின் வீடு களைக்கட்டியுள்ளது. இந்த விழாவிற்கு கோபியின் காதலி ராதிகாவிற்கு பாக்கியலட்சுமி அழைப்பு விடுத்திருந்தார். நிகழ்ச்சிக்கு அவரும் வந்தநிலையில், கோபி மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமமும் இதையொட்டி நடத்தப்பட்டது.

மீட்டிங் என தப்பிக்கும் கோபி
ஆனால் அவர் மீட்டிங் என்று சொல்லி ராதிகா போகும்வரையில் தன்னுடைய அறையிலேயே இருந்துவிடுகிறார். ராதிகா கிளம்பியதை அடுத்து சூப்பராக குத்தாட்டம் போட்டு அதை கொண்டாடுகிறார். தொடர்ந்து கடைக்கு செல்வதாக கூறி ராதிகாவை வரவழைத்து சாலையில் அவரை சந்திக்கிறார். உற்சாக மிகுதியில் அவரது கையைப் பிடித்துக் கொண்டு ரொமான்ஸ் செய்கிறார்.

உண்மையை தெரிந்துக்கொள்ளும் மூர்த்தி
கதையில் புதிய ட்விஸ்டாக இந்த நிகழ்வை மூர்த்தி பார்த்து விடுகிறார். இதையடுத்து சந்தேகம் கொள்ளும் அவர் தன்னுடைய மனைவி தனத்துடன் சென்று ராதிகாவிடம் உண்மையை தெரிந்துக் கொள்கிறார். தொடர்ந்து கோபியிடம் வந்து இதுகுறித்து விவாதம் செய்கின்றனர். ஆனால் அவர் ஆக்ரோஷமாக நடந்துக் கொள்கிறார்.

கோபியுடன் மூர்த்தி சண்டை
இதையொட்டி இருவருக்கும் சண்டை நடக்கிறது. ஆனால் வெளியில் இருக்கும் யாருக்கும் இந்த சண்டை தெரியாது. தொடர்ந்து மூர்த்தி, கோபியின் இந்த ஏமாற்று வேலையை குடும்பத்தினரிடம் சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் வரும் வாரத்தில் கதை செல்கிறது. ரசிகர்களுக்கு சிறப்பான எபிசோட்கள் வரும் வாரத்தில் காத்திருக்கிறது.