Don't Miss!
- Lifestyle
இந்த சமையல் உத்திகள் மூலம் உங்கள் உடல் எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?
- News
"உடனே வாபஸ் பெறுங்கள்!" நுபுர் சர்மா பற்றி சுப்ரீம் கோர்ட் கருத்துகளுக்கு.. எதிராக புதிய மனு தாக்கல்
- Technology
நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 10 சூப்பர் கேஜெட்கள்.! வீடுகளில் கட்டாயம் தேவைப்படும்.!
- Finance
இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!
- Automobiles
மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் !
சென்னை : பாக்கியலட்சுமி சீரியல் நாயகன் கோபி, எங்க போனாலும் திட்டுறாங்க என்று உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகரை கட்டிப்பிடித்த பொன்னியின் செல்வன் நடிகை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த ருசீகரம்!

பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் வரும் கோபி தான் இந்த சீரியலின் பரபரப்புக்கு காரணம். நெகடிவ் ரோலால் சீரியலின் டி.ஆர்.பியை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் கோபி. பெயர் தான் பாக்கியலட்சுமி சீரியல் ஆனால் மொத்த கதையும் கோபியை சுற்றி தான் நடக்கிறது. இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர்.

சுப்பரான நடிப்பு
ஆனாலும் தான் ஏற்று நடிக்கும் ரோலை சிறப்பாக எடுத்து செல்கிறார் கோபியாக நடிக்கும் சதீஷ் குமார். பாக்கியலட்சுமி கோபி கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்து சென்றுள்ளது. மனைவி பாக்கியலட்சுமியிடம் ஒரு மாதிரியான நடிப்பு, முன்னாள் காதலி ராதிகாவிடம் ரொமான்டிக் ஆன முகம் என கோபியாக நடிக்கும் சதீஷ் குமாரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

எங்க போனாலும் திட்டுறாங்க
இந்நிலையில், நடிகர் சதீஷ்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதற்கு முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து இருந்தேன். அதில் கண்டபடி திட்டி மெசேஜ் வந்ததால், அதை டெலிட் செய்து விட்டு புதிய கணக்கு தொடங்கினேன். தற்போது இதிலும் மனம் கஷ்டப்படுத்துற மாதிரி திட்டுறாங்க. ஒரு நடிகனா, சதீசை ஒரு மனுஷனா எனக்கு ஒரு விஷயம் புரியல. நல்ல நடிச்சாலும் தப்பு நல்ல நடிக்கலனாலும் தப்புனா நான் என்ன பண்றதுனு புரியல.

சத்தியமா ஒன்னும் புரியல
கடவுள் எனக்கு ஏதோ ஒரு திறமை கொடுத்து இருக்கிறார் அதை வெளிப்படுத்தித்தான் கோபி கதாபாத்திரத்தில் நடத்தி வருகிறேன். கோபியா நல்ல நடிச்சாலும் ...நடிக்கலனாலும் தப்பாகி விடுகிறது. சத்தியமா இந்த வாழ்க்கை பற்றி ஒன்னும் புரியல... ஏதோ கொடுத்த வேலையை ஒழுங்கா செய்கிறேன் என்ற மனதிருப்தி மட்டும் இருக்கு என்று மனவேதனையுடன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து உங்கள் கதாபாத்திரத்தில் அழகாக நடிக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.