வீட்டை விட்டு வெளியேறும் பாக்யா...அடுத்து வர போகும் ட்விஸ்ட் இதுதான்
சென்னை : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. 500 எபிசோட்களை கடந்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.
பாக்யாவின் கணவர் கோபி, ராதிகாவை திருமணம் செய்யும் முடிவில் தீவிரமாக இருக்கிறார்.இதற்காக பல ஏமாற்று வேலைகள் செய்கிறார். பாக்யாவை ஏமாற்றி, கோர்டிற்கு அழைத்துச் சென்று விவாகரத்திற்கு கையெழுத்து போட வைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கோபிக்கு ஏற்படும் விபத்தால் பாக்யாவிற்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது.
இதனால் அதிர்ந்து போகும் பாக்யா, வீட்டிற்கு வரும் கோபியிடம் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். மொத்த குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கும் போது அத்தனை உண்மைகளையும் போட்டு உடைத்து விடுகிறார் பாக்யா. ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்த அந்த சீன் நடந்து முடிந்துள்ளது. கோபி, குடும்பத்திடம் வசமாக சிக்கிக் கொண்டு விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறும் பாக்யா
கோபி - ராதிகா உறவு பற்றியும், கோபி செய்த அத்தனை ஃபிராடு தனத்தையும் குடும்பத்தார் முன் போட்டு உடைக்கும் பாக்யா, அடுத்து என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், வீட்டை விட்டு பாக்யா வெளியேறுகிறார். பாக்யாவை சமாதானம் செய்வதற்காக எழில் மற்றும் செல்வி ஆகியோர் பாக்யாவின் பின்னாலேயே செல்கிறார்கள். கோபியை தவிர மொத்த குடும்பமும் நடுரோட்டில் நின்று, பாக்யாவிற்காக கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருப்பதாக நேற்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்து என்ன நடக்கிறது
இனி பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார். கோபி - ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றிய ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இன்றைக்கு இது தான் நடக்கும்
இன்றைய எபிசோடில் ராதிகாவின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகிறது. மயுவை அழைத்துக் கொண்டு மும்பை செல்ல தயாராகிறார் ராதிகா. அப்போது வழக்கம் போல் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் அவரை சமாதானம் செய்கிறார்கள். ராதிகாவின் அம்மா, உனக்கும் கோபியை பிடிக்கும் தானே. பாக்யா ஒரு விஷயத்தை தவிர கோபியிடம் உனக்கு வேறு என்ன பிரச்சனை உள்ளது. அவர் உன் மீதும் மயு மீதும் உயிராக இருக்கிறார். இப்போதும் உன்னை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் என வழக்கமான அட்வைசை சொல்கிறார்.

அடுத்த ட்விஸ்ட் இது தான்
ஆனால் வழக்கம் போல் அம்மாவின் பேச்சை எதர்த்து கோபப்படாமல் இந்த முறை ராதிகா சற்று தயங்கி, யோசிக்கிறார். இதற்கு பிறகு ராதிகா எடுக்க போகும் முடிவு தான் மிகப் பெரிய ட்விஸ்ட். அம்மாவின் பேச்சை கேட்டு ராதிகா மனம் மாறி, கோபியை திருமணம் செய்ய தயாராக போகிறாராம். தற்போது எல்லா உண்மையும் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டதால் ராதிகாவின் மன மாற்றத்திற்கு கோபியின் ரியாக்ஷன் என்ன, வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது தான் சீரியலின் அடுத்த கட்ட நகர்வாக இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications











