»   »  தியேட்டர்ல கபாலி பாத்திருப்பீங்க.. அடுத்து டிவில பாட்ஷா பார்க்க நீங்க ரெடியா?

தியேட்டர்ல கபாலி பாத்திருப்பீங்க.. அடுத்து டிவில பாட்ஷா பார்க்க நீங்க ரெடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் ரிலீசாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வரும் நிலையில், ரஜினியின் மற்றொரு சூப்பர்ஹிட் படமான பாட்ஷாவை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த திட்டமிட்டுள்ளது சன் டிவி.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மலேசிய டான் ஆக ரஜினி நடித்துள்ளார்.

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், முன்னதாக பாட்ஷா போல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாட்ஷா...

பாட்ஷா...

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மும்பை தாதாவாக நடித்திருந்தார் ரஜினி. சூப்பர்ஹிட் படமான இது ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றது.

டான்... டான்...

டான்... டான்...

எனவே, மலேசிய டான் ஆக ரஜினி தோன்றும் கபாலியும் இன்னொரு பாட்ஷாவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான டான் ஆக தோன்றி கபாலியில் அசத்தினார் ரஜினி.

சன் டிவி...

சன் டிவி...

ஆனால், கபாலி படம் ரிலீசான நாள் முதலே பாட்ஷா படப்பெயரும் ஏதாவது வகையில் ஊடகங்களில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, இதனை தங்களுக்கு சாதகமாக்கி, மீண்டும் ரசிகர்களுக்கு பாட்ஷா பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர இருக்கிறது சன் டிவி.

டிஆர்பி எகிறும்...

டிஆர்பி எகிறும்...

வரும் ஞாயிறன்று மாலை பாட்ஷா படத்தை ஒளிபரப்ப இருப்பதாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. நிச்சயம் டிஆர்பி எகிறும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
The Sun TV is telecasting Rajini's super duper hit movie Baasha on coming sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil