கோபியை துரத்தியடிக்கும் ராதிகா... மூர்த்தி போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. சமீப நாட்களாக அதிகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியலாகவும் பாக்யலட்சுமி இருந்து வருகிறது.

Recommended Video

Moorthy போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே - Bakyalakshmi | Filmibeat Tamil

இல்லத்தரசிகள் படும் கஷ்டங்களை சொல்வதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல், தற்போது பாக்யலட்சுமியின் கணவர் கோபியை மையமாக வைத்தே சென்று கொண்டிருக்கிறது. பாக்யலட்சுமியை விட கோபி கேரக்டருக்கு தான் ஃபேன்ஸ் அதிகம்.

உண்மையை கண்டுபிடிக்கும் மூர்த்தி

உண்மையை கண்டுபிடிக்கும் மூர்த்தி

கடந்த சில நாட்களாக மெகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தினர், பாக்யலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வருவதாக காட்டப்பட்டது. இதில் கோபியின் நடவடிக்கை மேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சந்தேகம் வருகிறது. கடைசியாக கோபிக்கும், ராதிகாவிற்கும் இடையேயான உறவையும் மூர்த்தி கண்டுபிடித்து விடுகிறார்.

வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

ராதிகா வீட்டிற்கே நேரில் சென்று, விசாரித்து கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறார்கள். கோபி நல்லவர் இல்லை. அவர் உங்களையும் அவரது குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என ராதிகாவிடம் சொல்லி விட்டு செல்கின்றனர். பாக்யாவிடம் தனம் சொன்ன விஷயங்களால் அவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கிடையில் உண்மை தெரிந்த மூர்த்தி, கோபியிடம் சண்டை போட, இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் மூர்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விடுகிறார் கோபி.

வந்திடுச்சு லேட்டஸ்ட் ப்ரோமோ

வந்திடுச்சு லேட்டஸ்ட் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கிளம்பிச் சென்றதும், மெகா சங்கமம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வரும் வார எபிசோட்டிற்கான பாக்யலட்சுமி சீரியல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோ அனைவரிடமும் வரவேற்பை பெற்று, இந்த எபிசோட் எப்போது வரும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோபியை துரத்தும் ராதிகா

கோபியை துரத்தும் ராதிகா

லேட்டஸ்ட் ப்ரோமோவில், பாக்யாவும் எழிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபிக்கு ஆதரவாக பாக்யா பேசுகிறார். ஆனால் அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதாக மறைமுகமாக அம்மாவிடம் சொல்கிறார் எழில். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறார் பாக்யா. அதே சமயத்தில் ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபியிடம், அவரது குடும்பத்தை காட்டும் படி கேட்கிறார் ராதிகா. இதற்கு நோ சொல்லும் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கத்துகிறார் ராதிகா.

எபிசோட் எப்போப்பா வரும்

எபிசோட் எப்போப்பா வரும்

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இந்த எபிசோட் எப்போப்பா ஒளிபரப்பாகும் என ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். பாக்யா, ராதிகா இருவரிடமும் கோபி செமயாக சிக்கிக் கொண்டுள்ளார். அடுத்து என்ன நடக்கும், கோபி நிலைமை என்னவாகும் என கேட்டு வருகிறார்கள். அதோடு பாக்யா, ராதிகா இருவருக்கும் எப்போதும் கோபி பற்றிய முழு உண்மை தெரிய வரும் என ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுக்கு என்னவெல்லாம் நடக்குமோ

இதுக்கு என்னவெல்லாம் நடக்குமோ

ஏற்கனவே கோபி ரோலில் நடிக்கும் நடிகர் சதீசை நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக நினைத்து, பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்காக வேதனைப்பட்டு, சதீசே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வேதனையாக பேசிய வீடியோ செம வைரலானது. இதில் இனி வர போகும் எபிசோட்டை பார்த்து விட்டு இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறார்களோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X