உலக மகா நடிகன்ய்யா நீ...தவிடு பொடியாகும் திட்டம்...குடும்பத்திடம் வசமாக சிக்கும் கோபி

சென்னை : விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் இந்த வாரம் குடும்பத்தினரிடமும், ராதிகாவிடமும் கோபி வசமாக சிக்கும் சீன் நடக்க போகிறதாம். இதனால் ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த வார எபிசோடிற்காக காத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக செல்லும், பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்யலட்சுமி. குடும்ப தலைவிகளை மிகவும் கவர்ந்த சீரியல். ஆரம்பத்தில் குடும்ப தலைவிகள் படும் கஷ்டத்தை சொல்வதாக அமைக்கப்பட்ட இந்த சீரியல், தற்போது குடும்ப தலைவிகளுக்கு நம்பிக்கை, தைரியம் கொடுப்பதாக மாறி உள்ளது.

சிறந்த வில்லன் கோபி

சிறந்த வில்லன் கோபி

இதில் டைட்டில் ரோலான பாக்யலட்சுமி கேரக்டரை விட, அவரின் கணவராக வரும் கோபி கேரக்டருக்கு தான் ஃபேன்ஸ் அதிகம். சிறந்த வில்லனுக்கான விஜய் விருதுகளை கூட இந்த ரோலில் நடிக்கும் சதீஷ் தான் இந்த ஆண்டு வாங்கினார். அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் வில்லத்தனம், ரெண்டு பொண்டாட்டி வைத்திருப்பவர்களின் கஷ்டத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

நெருக்கடியில் சிக்கிய கோபி

நெருக்கடியில் சிக்கிய கோபி

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவை ஏமாற்றி விட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். இந்த சமயத்தில் கோபியின் அப்பா ராமமூர்த்தியின் 75வது பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் சேர்த்து மகாசங்கமம் நடந்து வருகிறது. பிறந்த நாள் விழாவில், திருமண செய்து கொள்பவருடன் வரும் படி பாக்யா, ராதிகாவை அழைத்துள்ளார். ராதிகாவும், பிறந்தநாளுக்கு கண்டிப்பாக போக கோபியிடம் அடம்பிடிக்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார் கோபி.

கதிரிடம் சிக்கும் கோபி

கதிரிடம் சிக்கும் கோபி

இனி இந்த வார எபிசோடில், பிறந்தநாள் விழாவையே நடக்க விட மாட்டேன். எப்படியாவது நிறுத்துவேன் என கோபமாக தனது நண்பரிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார் கோபி. இதை அந்த பக்கமாக வந்த கதிர் கேட்டு விடுகிறார். ஆனால் கதிருக்கு தனது பிளான் பற்றி தெரிந்து விட்டது என தெரியாமல், குடும்பத்தில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் நெஞ்சு வலி வந்தது போல், கீழே விழுந்து நாடகம் ஆடுகிறார் கோபி.

உலக நடிப்புடா சாமி

உலக நடிப்புடா சாமி

ஆனால் மூர்த்தி அவருக்கு முதலுதவி செய்வதாக முரட்டுதனமாக நடந்து, கோபியை திணற வைக்கிறார். உடனடியாக மருத்துவமனை போய், தனக்கு உடம்பு சரியில்லாதது போல் நாடகம் போடுகிறார் கோபி. அதே சமயம் ராதிகாவிடமும் சென்று நெஞ்சு வலி நாடகத்தை நடத்துகிறார். அவரும் இதை உண்மை என நம்பி, பிறந்த நாளுக்கு நான் போகிறேன். நீங்கள் டாக்டரை போய் பாருங்கள் என கூறுகிறார். இதனால் ராதிகாவிடம் எஸ்கேப் ஆகிறார் கோபி. மருத்துவமனையிலேயே தங்கி ட்ரீட்மென்ட் எடுப்பதாக பாக்யாவிடமும் நாடகம் ஆடுகிறார் கோபி.

இந்த வாரம் சிக்குறாரா கோபி

இந்த வாரம் சிக்குறாரா கோபி

இதற்கிடையில் கோபியின் திட்டம் பற்றி தெரிந்து கதிர், கோபியின் திட்டத்தை தவிடு பொடியாக்குகிறார். கதிர் செய்ய போகும் செயலால் கோபி குடும்பத்தினர் மற்றும் ராதிகாவிடம் சிக்குவாரா அல்லது வழக்கம் போல் இந்த முறையும் எஸ்கேப் ஆகி விடுவாரா என்பதை தான் ட்விஸ்டுகளுடன் இந்த வாரம் சொல்ல போகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X