»   »  மலையாள சேனலில் ஒளிபரப்பான பாகுபலிக்கு அமோக வரவேற்பு! 25ம் தேதி சோனிமேக்சில் பாகுபலி

மலையாள சேனலில் ஒளிபரப்பான பாகுபலிக்கு அமோக வரவேற்பு! 25ம் தேதி சோனிமேக்சில் பாகுபலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி திரைப்படம், வரும் 25ம் தேதி சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஏற்கனவே மலையாள சேனலான மனோரமாவில் அந்த படம் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பில், தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி.

‘Bahubali’ Hindi version is all likely to be screened on Sony Set Max

இப்படம் முதல்முறையாக மலையால சேனலான 'மழவில் மனோரமா'-வில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலையாள டப்பிங்கில் ஒளிபரப்பானது. இந்நிலையில், வரும் 25ம் தேதி, ஹிந்தி சேனலான சோனி மேக்ஸ்சில் பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல, தெலுங்கு மொழியில் பாகுபலி திரைப்படம், வரும் தசரா பண்டிகையன்று, 'மா' டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பட உரிமையை ரூ.20 கோடி கொடுத்து மா தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

மலையாள சேனலில் பாகுபலி திரைப்படம், ஒளிபரப்பான அன்று, டி.ஆர்.பி ரேட்டிங் அபாரமாக இருந்ததாக மலையாள டிஆர்பி வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
SS Rajamouli’s magnum opus ‘Bahubali’ Hindi version is all likely to be screened on Sony Set Max in next few weeks while MAA TV from Telugu TV circuit is planning the Telugu ‘Bahubali’ telecast for coming Dasara or Diwali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil