»   »  மா டிவியில் அக்டோபர் 25ல் பாகுபலி; 10 செகண்ட் விளம்பரத்திற்கு ரூ.2.5 லட்சம் கட்டணம்

மா டிவியில் அக்டோபர் 25ல் பாகுபலி; 10 செகண்ட் விளம்பரத்திற்கு ரூ.2.5 லட்சம் கட்டணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மா டிவியில் அக்டோபர் 25ம் தேதி பாகுபலி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படம் ஒளிபரப்பாகும் போது, 10 செகண்ட் விளம்பரக்கட்டணமாக ரூ.2.5 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தின் வசூல், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், இந்தியாவின் மிக அதிக வசூலான படம், மிகப்பெரிய போஸ்டருக்காக கின்னஸ் சாதனை செய்த படம் என்ற பெருமைகளை பெற்றது.

Bahubali Movie Premiere on MAA TV on October 25 at 6 PM

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும், குறிப்பாக சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி பெரும் வசூலை குவித்த இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை தற்போது வியாபாரம் ஆகியுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா ஆகியோர் நடித்துள்ள பாகுபலி படம் உலக அளவில் 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. பாகுபலி படத்தின் தெலுங்கு தொலைக்காட்சி உரிமத்தை மா டிவி 20 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது. அக்டோபர் 25ம் தேதி இந்த படம் மா டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஒளிபரப்புவதற்கு முன்னர் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் குறித்த வீடியோவையும் மா டிவி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ஒளிபரப்புக்கு இடையில் 10 வினாடிகள் விளம்பரத்திற்கு ரூ.2.5 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
MAA TV authoritatively stowed the “Bahubali” Telugu form satellite rights paying a bomb of above Rs.20 Crores, an arrangement which can be figured as development in Indian little screen system. Telugu rendition coming as Dasara unique on October 25 at 6.00 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil