»   »  பைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

பைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன்டிவியில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. விஜய், டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவியிலும் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தம் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. தொலைக்காட்சி ரசிகர்களை வீட்டை விட்டு வெளியே நகரவிடாமல் செய்வதற்காக சேட்டிலைட் சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன.


நடிகர்களின் சிறப்பு பேட்டிகள், புத்தம் புதிய திரைப்படங்களின் முன்னோட்டங்கள் என டிவி நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு கலக்கல் புத்தாண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 14ல் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி முன்னோட்டம் போட ஆரம்பித்துள்ளனர்.


ஸ்ரீலங்கா வசந்தம் டிவி

ஸ்ரீலங்கா வசந்தம் டிவி

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்காவில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.


ஏசியா நெட் புலிமுருகன்

ஏசியா நெட் புலிமுருகன்

மலையாள சேனலான ஏசியா நெட் தொலைக்காட்சியில் விசுக்கனி பிறப்பு கொண்டாட்டமாக புலிமுருகன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


ஜீ தமிழ் சைத்தான்

ஜீ தமிழ் சைத்தான்

ஜீ தமிழ் டிவியில் விஜய் ஆன்டணி நடித்த சைத்தான், விஜய் சேதுபதி நடித்த றெக்க திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் யாரு கையில் ரிமோட் இருக்கோ அவங்கதான் ராஜா.


English summary
Tamil New Year Special Programs Vijay's Bairavaa which released for Pongal 2017 is all set to have its Sun TV premiere. O kaadal kanmani, Saithan for Vijay TV and Zee Tamil TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil