கண்ணம்மா, வெண்பா விலகல்...பாரதி கண்ணம்மாவிற்கு இப்படி சோதனையா
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 600 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த ட்விஸ்ட், விறுவிறுப்பு என செல்வதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். டாக்டரான பாரதியும், கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்கிறார்கள். பல சதி வேலைகள் செய்து இவர்களை பிரிக்கிறாள் வெண்பா. கண்ணாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றை மாமியார் செளந்தர்யா எடுத்துச் சென்று வளர்க்கிறார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கு பிறந்த மற்றொரு குழந்தை பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறாள் கண்ணம்மா. குழந்தை ஹேமா தன்னுடன் தான் இருக்க வேண்டும் என பாரதியும், கண்ணம்மாவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். அடுத்து என்ன நடிக்கும் என இப்படி சுவாரஸ்யமாக கதை செல்கிறது.

விலகும் கண்ணம்மா
இந்நிலையில் சின்னத்திரை உலகில் பரபரப்பு செய்தியாக, கண்ணம்மா ரோலில் நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. கண்ணம்மா ரோலில் நடிக்க மற்றொரு நடிகையை தேடி வருகிறார்களாம். அவரை வைத்து தான் மீதமுள்ள எபிசோட்களை எடுக்க போகிறார்களாம்.

23 ம் தேதி கடைசி நாளா
அக்டோபர் 23 ம் தேதி தான் பாரதி கண்ணம்மா சீரியல் ஷுட்டிங்கில் ரோஷினி கடைசியாக கண்ணம்மா ரோலில் நடித்துள்ளாராம். அதோடு சக நடிகர்கள் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் டீம் இடம் இருந்து விடை பெற்று சென்று விட்டாராம். சமீபத்தில் தான் அகில் கேரக்டரில் நடித்த அகிலன், புதிய பட வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

இது தான் காரணமா
பாரதி கண்ணம்மா சீரியலில் இனி கதைக்களம் மாற போவதால் அந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது காரணம் இல்லையாம். ரோஷினிக்கு புதிய படம் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதனால் தான் சீரியல் வாய்ப்பை அவர் கைவிட முடிவு செய்துள்ளாராம்.

இவரும் விலக போகிறாரா
ஹீரோயின் கண்ணம்மா ரோலில் நடிக்கும் ரோஷினி மட்டுமல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கும் வெண்பாவும் விரைவில் சீரியலில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது. நிஜத்தில் கர்ப்பமாக இருக்கும் வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத், பிரசவத்திற்கு பிறகு ஓய்வு தேவைப்படுவதால் சீரியலில் இருந்து விலக போகிறாராம். இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே வெண்பா கேரக்டரில் அவர் நடிக்க போகிறாராம்.

இனி என்ன ஆகும் சீரியல்
முக்கியமான இந்த கேரக்டர்கள் இல்லாமல் கதையை எப்படி நகர்த்தி கொண்டு செல்ல போகிறார்கள் என தெரியவில்லை. வேறு ஒருவரை இவர்களின் கேரக்டரில் நடிக்க வைத்தால் அதை மக்கள் ஏற்பார்களா, அதை சீரியலின் டிஆர்பி.,யை மொத்தமாக பாதிக்கும் என்பதால் என்ன செய்யலாம் என பாரதி கண்ணம்மா சீரியல் டீம் ஆலோசித்து வருகிறதாம்.

இன்னும் இவ்வளவு கதை இருக்கா
கருத்த முத்து என்ற மலையாள டிவி தொடரின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வெற்றிகராமாக ஒளிபரப்பாகி வருகிறது. மலையாளத்தில் இந்த சீரியல் 5 சீசன்களை கொண்டதாக எடுக்கப்பட்டது. தமிழில் தற்போது தான் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











