ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ?

சென்னை : மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் எது என்றால், அது பாக்யலட்சுமி சீரியல் தான். அதிலும் மிக முக்கியமான அதிரடி திருப்பங்கள், விறுவிறுப்பு என செம சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

குடிபோதையில் உண்மையை உளறும் கோபி

குடிபோதையில் உண்மையை உளறும் கோபி

மூர்த்தியும், தனமும் வந்து கோபி பற்றிய சொன்னதும், அவரின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என கோபியிடம் அடம்பிடிக்கிறார் ராதிகா. ஏதேதோ காரணங்களை சொல்லி முடியாது என உறுதியாக இருக்கும் கோபியை வீட்டை விட்டு வெளியேறி தள்ளுகிறார் ராதிகா. இதனால் ஓவராக குடிக்கும் கோபி, குடி போதையில் ராதிகா வீட்டிற்கு வந்து, தனது போனை காட்டி பாக்யா தான் தனது மனைவி என்ற உண்மையை உளறி விடுகிறார் கோபி. இதனால் அவர் சொன்ன பொய்களை நினைத்து பயங்கர கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார் ராதிகா.

வெளியே தள்ளி கதவடைக்கும் ராதிகா

வெளியே தள்ளி கதவடைக்கும் ராதிகா

இருந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன். பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன். உனக்காக தான் அனைத்தையும் செய்தேன் என சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் கோபி. ஆனால் ஆத்திரத்தில் கத்தும் ராதிகா, கோபியை சட்டையை பிடித்து வெளியே தள்ளி, கதவை அடைக்கிறார்.

Recommended Video

Bakyalakshmi-போதையில் உண்மையை உளறிய கோபி... ராதிகா அடுத்து என்ன முடிவு எடுப்பார்? #TV
 பாக்யாவிடம் நண்பர் சொல்லும் தகவல்

பாக்யாவிடம் நண்பர் சொல்லும் தகவல்

இதற்கிடையில் கோபி குடி போதையில் காரை ஓட்டு வந்ததை பாக்யாவிற்கு போன் செய்து சொல்கிறார் கோபியின் நண்பர். வீட்டில் யாருக்கும் தெரிய கூடாது என நினைத்து தானே கோபியை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் பாக்யா. இப்படி அடுத்து என்ன நடக்கும் என பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ராதிகா – பாக்யா சந்திப்பு

ராதிகா – பாக்யா சந்திப்பு

இந்த சமயத்தில் ராதிகா வீட்டிற்கு வந்து அவரை பாக்யா சந்தித்து பேசுவது போன்ற ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எதற்காக பாக்யா, ராதிகாவை சென்று சந்திக்கிறார். பாக்யாவிடம் கோபி பற்றி உண்மையை சொல்லுவாரா ராதிகா, பாக்யாவை விவாகரத்து செய்வாரா கோபி, அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X