For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஸ்ரீ சங்கரா டிவியில் பஜன் சாம்ராட் சீசன் 2

  By Mayura Akilan
  |

  ஸ்ரீ சங்கரா டிவியின் பஜன் சாம்ராட் நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு பஜன் சாம்பராட் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி இப்போது அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது.

  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மட்டுமல்லாது உலகின் 74 நாடுகளுக்கு ஸ்ரீ சங்கரா தொலைககாட்சியின் நிகழ்ச்சிகள் சென்றடைந்து இந்தியாவின் பாரம்பரியங்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

  ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டும் விதமாக சில மாதங்களுக்கு முன்னால் பஜன் சாம்ராட் சீசன் 2என்கிற குழு பஜனைக்கான போட்டியினை அறிவித்திருந்தது.

  பஜன் சாம்ராட்

  பஜன் சாம்ராட்

  நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சம் பஜன் பாடல்கள். இவை மிக எளியமையான மொழி நடையில், பாமரனும் புரிந்து , பின்பற்றி பாடும் வகையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இப்படிப்பட்ட நமது அரிய பஜன் பாடல்களை இளையதலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டது தான் பஜன் சாம்ராட்.

  இறைவன் அருள் பெற

  இறைவன் அருள் பெற

  இறைவன் அருளைப் பெறுவதற்கு 1.ஸ்ரவணம் 2.கீர்த்தனம் 3.ஸ்மரணம் 4.பாதசேவனம் 5.அர்ச்சனம் 6.வந்தனம் 7.தாஸ்யம் 8.ஸக்யம் 9.ஆத்ம நிவேதனம் ஆகிய ஒன்பது விதமான பக்தி நெறிகள் இருக்கின்றன.

  பஜனைப் பாடல்கள்

  பஜனைப் பாடல்கள்

  இன்றைய மனதை அடக்கி தியானம் செய்வது கடினம். கண்ணைத் திறந்தாலாவது ஒரே ஒரு பொருள்தான் கண்முன் தெரியும்.கண்ணை மூடித் தியானம் செய்ய ஆரம்பித்தாலோ ஆயிரத்தெட்டு பொருட்கள் நம் மனத்திரையில் விரியும். ஆகவே மேற்கண்ட பக்தி நெறிகளுள் ஒன்றான கீர்த்தனம் என்கிற முறையில் வருவது தான் பஜன் பாடல்கள்.

  மன அழுத்தம் குறையும்

  மன அழுத்தம் குறையும்

  இறைவனை நினைத்து குழுவாக பஜன் பாடல்கள் பாடும் பொழுதும் கேட்கும் பொழுதும் மன அழுத்தங்கள் குறைந்து நேர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாலான நோய்களுக்கு மாற்று மருத்துவமாக பஜன் பாடல்கள் திகழ்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று.

  200 குழுக்கள்

  200 குழுக்கள்

  ஜன் சாம்ராட் போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். நிறைய ஐடி மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர். தென்னிந்தியா முழுவதும் 11 தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. 200 குழுக்கள், 1400 பாடகர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

  காலிறுதியில்

  காலிறுதியில்

  24 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பெங்களூருவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் பாடி அவர்களில் இருந்து டாப் 12 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  அரையிறுதிச்சுற்று

  அரையிறுதிச்சுற்று

  ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கின. இதில் திருச்சி, பாலக்காடு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 6 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

  பெங்களூருவில் இறுத்திச்சுற்று

  பெங்களூருவில் இறுத்திச்சுற்று

  இறுதிச்சுற்றில் தேர்வு செய்யப்பட்ட அணிகள் பெங்களூருவில் நடைபெறும் பிரம்மாண்ட போட்டியில் பங்கேற்று பாட உள்ளனர். இந்த குழுவினருக்கு பாகவதர்கள் ஆலோசனை வழங்கினர்.

  ஸ்ரீ சங்கரா டிவியில்

  ஸ்ரீ சங்கரா டிவியில்

  இந்த பஜனைப் பாடல்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் வியாழன், வெள்ளி இரவு 7 மணிமுதல் 8 மணிவரையும், ஞாயிறன்று மதியம் 1 மணிமுதல் மாலை 4 மணிவரைக்கும் ஒளிபரப்பாகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கும்.

  English summary
  BSS‐2 completed its Auditions across 11 Audition Centres in South India with almost giving an opportunity to over 200+ Bhajan Teams and over 1400.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more