»   »  குட்டு உடைந்த கடுப்பில் பரணியை வெளியேற்றிய பிக் பாஸ்

குட்டு உடைந்த கடுப்பில் பரணியை வெளியேற்றிய பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவர் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றதால் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது அனைத்தும் எழுதிக் கொடுத்து நடப்பது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் கஷ்டப்படும்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையா என்று கூட பலர் கேட்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் பிக் பாஸ் மீம்ஸ்கள் தான் அதிகம்.

பரணி

பரணி

ஏற்கனவே நெட்டிசன்கள் பிக் பாஸை கலாய்த்து வரும் நிலையில் பரணி தப்பியோட முயன்றது இந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடித்ததையும் அவர்கள் கண்டுபிடித்து கலாய்த்தனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பரணியால் மேலும் அசிங்கப்பட்டதை பார்த்த பிக் பாஸ் அவரை தப்பியோட முயன்ற குற்றத்திற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால் நெட்டிசன்கள் சமாதானம் ஆகவில்லை.

குஷால்

குஷால்

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தப்பியோட முயன்ற குஷாலை கூடத் தான் திடீர் என்று வெளியேற்றினார்கள். இதுல கூடவா பிக் பாஸு காப்பியடிப்பீங்க என்று வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஓடவும் முடியாது

ஓடவும் முடியாது

பிக் பாஸ் 15 பேரை மட்டும் அல்ல நெட்டிசன்களையும் கூர்ந்து கவனித்து வருகிறார். சமூக வலைதள டிரெண்டுக்கு ஏற்ப நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharani has been evicted from Big Boss house after he tried to escape from there citing torture from fellow contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil