»   »  பிக் பாஸில் மீண்டும் பரணி: பரமக்குடிக்காரரிடம் நியாயம் கேட்கிறார்

பிக் பாஸில் மீண்டும் பரணி: பரமக்குடிக்காரரிடம் நியாயம் கேட்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பரணி இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஆளாளுக்கு ஜூலியை டார்கெட் செய்தார்கள், செய்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் திருப்பி அடிக்குமாறு ஜூலிக்கு பரணி ஐடியா கொடுத்தார்.

அதன் பிறகு அனைவரும் ஜூலியை விட்டுவிட்டு பரணியை டார்கெட் செய்தார்கள்.

எஸ்கேப்

எஸ்கேப்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பியோட முயன்றார் பரணி. பின்னர் அவர் விதிமீறலுக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

பரணி

பரணி

இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி கலந்து கொள்கிறார். பிக் பாஸ் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி அவர் உலக நாயகன் கமல் ஹாஸனிடம் தெரிவிக்கிறார்.

கமல்

கமல்

பரணி கூறுவதை கேட்டு கமல் ஹாஸன் என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பதை இன்று இரவு பார்க்கலாம். நிகழ்ச்சிக்கு பரணி தனது குடும்பத்தாரையும் அழைத்து வந்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

பொம்பள பொறுக்கி பட்டம் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பரணிக்கு திரையுலக பிரபலங்களும், நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharani will be appearing in Big Boss show tonight. He will explain his stand while he stayed in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil