சீரியலில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம்… பாரதி கண்ணம்மா ரோஷினி விளக்கம் !
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி அந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இதில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வந்தனர்.
இந்நிலையில் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்
சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் படக்குழுவினர் செட்டில் அவருக்கு ஃபேர்வெல் பார்ட்டி நடத்தி வழியனுப்பி வைத்தனர்.

பாரதிகண்ணம்மா
கருப்பாக இருக்கும் பெண்ணிற்கும், டாக்டருக்கு ஏற்படும் காதல், அவரை பிரிக்க வெண்பா சதி செய்கிறார். வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் பாரதியும், கண்ணம்மாவும் வெண்பாவின் சதி வேலைகளால் பிரிகிறார்கள்.

இருவரும் பிரிந்தனர்
பாரதியின் சந்தேகத்தால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிகிறார்கள். கண்ணம்மாவிற்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று கண்ணம்மாவிடமும், ஒரு குழந்தை பாரதியிடமும் வளர்கிறது. ஹேமா தன் மகள் என தெரியாமல் பாசத்தை பொழிகிறார். கண்ணம்மாவை விவாகரத்து பெற முயற்சிக்கிறார் பாரதி. இதற்கிடையில் கண்ணம்மா, வெண்பாவை போலீசில் மாட்டி விட்டு, சிறைக்கு அனுப்புகிறார்.

வினுஷா
இந்த சீரியலிருந்து கண்ணம்மா திடீரென வெளியேறினார். இதையடுத்து, கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா நடித்துள்ளார். மீண்டும் ஒளிபரப்பப்பட வேண்டிய சில பிளாஷ்பேக் காட்சிகள் வினுஷாவை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மன்னிக்கவும்
ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எதிர்பாராத காரணத்தினால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக நேரிட்டதாகவும் இது ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், எனக்கு கிடைத்துள்ள இந்த வளர்ச்சி உங்களால் கிடைத்தது என்றும், வரும் காலங்களில் உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடர்ந்து வேண்டுமென்றும் வீடியோ ஒன்றில் ரோஷினி தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











