“பாரதி கண்ணம்மா“ நீண்ட நாள் சஸ்பென்ஸ்… அதிர்ச்சியில் பாரதி !
சென்னை : பாரதி கண்ணம்மா தொடரில் லக்ஷ்மி, கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மை பாரதிக்கு தற்போது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அனைவரின் மனம் கவர்ந்த இத்தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாக உள்ளது.

பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த இரு வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தியது.

பரபரப்புடன்
கடந்த சில வாரங்களுக்கு முன் ஹேமா கடத்தல், அதையடுத்து பாரதி, கண்ணம்மா இருவரும் சந்தித்துக் கொண்டார். சமையல் அம்மாவுடன் இருக்க ஆசைப்படும் ஹேமாவை கட்டாயப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல முயன்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹேமாவை பாரதி, கண்ணம்மாவிடம் ஒப்படைந்து விட்டார். மேலும், கடந்த சில வாரங்களாக கண்ணம்மாவும் பாரதியும் சந்தித்த போது நிகழ்ந்த ரொமான்ஸ் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இரண்டு குழந்தைகள்
கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்தவுடன் பாரதியின் தாயார் ஒரு குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து சென்றுவிடுவார். அதில் ஒரு குழந்தை கண்ணம்மாவிடம் சௌந்தர்ய லக்ஷ்மி என்கிற பெயரிலும், இன்னொரு குழந்தை ஹேமா என்கிற பெயரில் பாரதியிடம் வளர்ந்து வருகின்றன.

லட்சுமி,ஹேமா
லட்சுமி மற்றும் ஹேமா இருவருமே தங்களின் குழந்தை தான் என்கிற உண்மை, பாரதி, கண்ணம்மா இருவருக்குமே இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.கண்ணம்மாவை பொறுத்தவரை ஹேமா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்த குழந்தை என்றே நினைத்து வருகிறாள். இதேபோல் பாரதிக்கு லக்ஷ்மியை தனது குழந்தை என்று தெரியாது.

பாரதி அதிர்ச்சி
இந்நிலையில், லஷ்மிக்கு திடீரென வயிறு வலி ஏற்படுகிறது. லக்ஷ்மியை மருத்துவமனைக்கு பாரதி அழைத்துச் செல்கிறார். லக்ஷ்மியின் பெற்றோர் யார் என தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பாரதி, அவளது ஸ்கூல் பையை திறந்து டைரியில் அவளின் பெற்றோர் பற்றிய விவரம் இருக்கிறதா என்று தேடுகிறார். அப்போது தான் லக்ஷ்மியின் அம்மா கண்ணம்மா என்பதை அறிந்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். நீண்ட நாட்களாக பாரதி கண்ணம்மா சீரியலின் சஸ்பென்ஸ் தற்போது உடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











