அந்த சீரியலில் நடித்தது பெரிய தவறு...ஓப்பனாக சொன்ன பாரதி கண்ணம்மா வெண்பா

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் லீட் ரோலாக கண்ணம்மா ரோலில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடிக்கிறார்கள். வில்லியான டாக்டர் வெண்பா ரோலில் ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

இவர் சில மாதங்களுக்கு முன் தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமாக உள்ளதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெரிய வயிற்றுடன் இருக்கும் ரீல் வீடியோக்கள் வெளியிடுவது, விதவிதமாக கலர்ஃபுல் கர்ப்பகால ஃபோட்டோஷுட் நடத்துவது என ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

சீரியலில் நடிக்க மாட்டாரா

சீரியலில் நடிக்க மாட்டாரா

ஃபரீனா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த உடனேயே, இனி பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் நடிக்க மாட்டார். வெண்பா கேரக்டரில் வேறு ஒருவர் மாற்றப்படுவார் என பல விதமாக செய்தி பரவியது. ஆனால் இவை அவைத்தும் தவறு, பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் தொடர்ந்து தானே நடிக்க உள்ளதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பிரேக் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

புடவையில் வெண்பா

புடவையில் வெண்பா

சொன்னபடியே, கர்ப்பமாக இருப்பதுடன் நடித்து வருகிறார்ஃபரீனா. பெரிய வயிற்றை மறைப்பதற்காக தற்போதெல்லாம் புடவையிலேயே தோன்றி நடித்து வருகிறார் ஃபரீனா. அதோடு ஃபரீனா நடிக்கும் காட்சிகளில் பெரும் க்ளோஸ்அப் ஷாட் வைத்து, அவரின் முகத்தை மட்டும் காட்டியே பெரும்பாலான சீன்கள் எடுக்கப்படுகின்றன.

ரசிகர்களுக்கு பதிலளித்த ஃபரீனா

ரசிகர்களுக்கு பதிலளித்த ஃபரீனா

அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்து வரும் ஃபரீனா, சமீபத்தில் Ask me Anything பகுதியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் பலர், கர்ப்பமாக இருக்கும் போது எப்படி ஷுட்டிங்கில் பங்கேற்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பற்றிய சில சுவாரஸ்ய கேள்விகளை கேட்டனர். பாரதி கண்ணம்மா சீரியல் BTS நிகழ்வுகள் மற்றும் ஃபோட்டோக்கள் பற்றிய பல தகவல்களையும் ஃபரீனா பகிர்ந்தார்.

இது தான் தவறான முடிவா

இது தான் தவறான முடிவா

அவர்களில் ரசிகர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் எடுத்த ஒரு தவறான முடிவு என்றால் எதை சொல்வீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஃபரீனா, நாச்சியார்புரம் சீரியலில் நடித்தது தான் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவாக நினைக்கிறேன் என்றார்.

200 எபிசோட்கள் ஓடிய சீரியல்

200 எபிசோட்கள் ஓடிய சீரியல்

நாச்சியார்புரம் என்ற சீரியல் 2019 ம் ஆண்டு ஜுலை மாதம் துவங்கப்பட்டது. கிட்டதட்ட 200 எபிசோட்கள் ஓடிய இந்த சீரியல், லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. ரக்ஷிதா மகாலட்சுமி, தினேஷ் ஆகியோர் கார்த்திக், ஜோதி ஆகிய கேரக்டர்களில் நடித்தனர். இதில் ஃபரீனாவும் முக்கிய ரோலில் நடித்தார்.

தொகுப்பாளினி ஃபரீனா

தொகுப்பாளினி ஃபரீனா

அஞ்சரைப்பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோ ரீல், சினிமா ஸ்பெஷல் போன்ற பல பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ஃபரீனா உபாயத்தை காதலித்து, 2017 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபரீனா திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X