»   »  பார்டா, யாரு யாரைப் பார்த்து நடிக்கிறான்னு சொல்றது: ஜூலிம்மா, நீ பொழைச்சுக்குவ!

பார்டா, யாரு யாரைப் பார்த்து நடிக்கிறான்னு சொல்றது: ஜூலிம்மா, நீ பொழைச்சுக்குவ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள ஓவியா நடிப்பதாக ஜூலியானா கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது போன்று டிஆர்பிக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. என்ன தான் பார்வையாளர்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிடுகிறார்கள்.

டிவி சீரியல்களை விட பிக் பாஸ் மக்களை கவர்ந்து இழுக்கிறது.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அடிக்கடி கூறுவதே ஜூலி போலியாக உள்ளார். அவர் நடிக்கிறார் என்று தான். அனைத்து கேமராக்களும் தன்னை தான் கவனிக்க வேண்டும் என்று ஜூலி நாடகமாடுகிறார் என்கிறார்கள் பிக் பாஸ் வீட்டுக்காரர்கள்.

ஆர்த்தி

ஆர்த்தி

ஜூலியை வம்பிழுத்து அழ வைத்துக் கொண்டே இருந்த ஆர்த்தி ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் போனால் என்ன காயத்ரி இருக்கிறாரே அந்த வேலையை செய்ய.

ஓவியா

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை விரட்டி விட திட்டமிட்டுள்ளனர். அவரை நாமினேட் செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் ஜூலியோ ஓவியா நடிப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஓவியாவுக்கு தற்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் யாராவது ஓவியாவை திட்டினால் அவரை வறுத்தெடுத்து மீம்ஸ் போடுகிறார்கள் ரசிக பெருமக்கள்.

English summary
Juliana who is accused of being fake in the Big Boss house said that actress Oviya is acting and not on her own.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil