»   »  பூமிகாவை ஒழிச்சுட்டு… அண்ணன் பொண்ணை கட்டு… சீரியல்களில் அதிகரிக்கும் இருதார திருமணங்கள்….

பூமிகாவை ஒழிச்சுட்டு… அண்ணன் பொண்ணை கட்டு… சீரியல்களில் அதிகரிக்கும் இருதார திருமணங்கள்….

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் காலை முதல் மாலை வரை அழுகாட்சி சீரியல்களை ஒளிபரப்பியே டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டது சன் டிவி. இந்த தொலைக்காட்சிகளில் பெரும்பாலான சீரியல்களில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது தவறில்லை என்கிற ரீதியிலேயே கதைகள் எழுதப்படுகின்றன.

சன் டிவியில் மட்டுமல்ல, ஜீ டிவி, ஜெயாடிவி உள்ளிட்ட பல சேனல்களிலும் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்கும் வகையில் சீரியல்கள் எடுக்கப்படுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்பது போலத்தான் பெரும்பாலான சீரியல்களில் கதைகள் எழுதப்படுகின்றன. அதிலும் வம்சம் தொடரில் பூமிகாவின் மாமியார் வசந்தாவும், கணவர் மதனும் இன்னும் எத்தனை முறைதான் திருமணம் செய்ய முயற்சி செய்வார்களோ தெரியலையே.

மதனா? மன்மதனா?

மதனா? மன்மதனா?

டாக்டர் மதன்தான் சீரியலின் வில்லன் என்றாலும் மன்மதன் போலவே சித்தரித்திருக்கின்றனர். சக்தியை திருமணம் முடிக்க ஆரம்பித்த மதன், பூமிகாவை திருமணம் செய்து கொள்ளவே, மாமியார் மருமகள் பிரச்சினை தொடங்குகிறது.

எத்தனை திருமணம்

எத்தனை திருமணம்

பிடிக்காத மருமகளை விரட்டி அடித்து விட்டு மதனுடன் வேலை செய்யும் டாக்டர் பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் மாமியார் வசந்தா. அதை பூமிகா முறியடிக்கிறாள்.

நடிகை மைனா உடன் திருமணம்

நடிகை மைனா உடன் திருமணம்

நடிகை மைனா போல வேடமிட்டு மதனை திருமணம் செய்து கொள்ளும் பூமிகா, மதனுக்கும் வசந்தாவிற்கும் சரியான பாடம் கற்பிக்கிறாள். அப்போது திருந்தும் மதன் பூமிகா உடன் வாழத் தொடங்குகிறான்.

மீண்டும் திருமண ஆசை

மீண்டும் திருமண ஆசை

மைனா போல வேடமிட்டு வந்து தன்னை ஏமாற்றியது பூமிகாதான் என்று தெரிந்து கொண்ட மதன், மீண்டும் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்குகிறான். தன்னுடைய மனைவியை குடிகாரியாக சித்தரிக்கின்றான்.

அண்ணன் மகளுடன் திருமணம்

அண்ணன் மகளுடன் திருமணம்

மருமகளைப் பற்றி தவறாக சொல்லி, அண்ணன் மகளை பெண் கேட்கிறாள் வசந்தா. ஆனால் அண்ணன் மகளோ, இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு வேறு மாப்பிள்ளை பாருங்க என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்கிறாள்.

இருதார திருமண கதைகள்

இருதார திருமண கதைகள்

பாசமலர் தொடரில் மனைவி இறந்து விட்டாள் என்று நம்பி பூவரசுவுக்கு உமாவை திருமணம் செய்து வைக்கின்றனர் சகோதரிகள். ஆனால், இறந்து போனதாக கருதப்பட்ட அண்ணியோ மீண்டும் திரும்பி வரவே சிக்கல் ஆரம்பிக்கிறது.

குழந்தை இல்லையே

குழந்தை இல்லையே

அதேபோல தனக்கு குழந்தை பிறக்காது என்ற காரணத்தைக் கூறி தனது கணவனுக்கு தங்கையை இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறாள் சரசு. அது சிக்கலில் இருக்கிறது.

அன்னக்கொடி

அன்னக்கொடி

சன்டிவியில் மட்டுமல்ல ஜீ தமிழ் சேனல், கலைஞர் டிவி, ஜெயாடிவி என பல சேனல்களிலும் இருதார கதைகள் ஒளிபரப்பாகின்றன. ஜீ தமிழில் அன்னக்கொடியும், 5 பெண்களும் என்ற சீரியலில் ஒரு ஆண் இரு பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் கதைதான் முக்கிய கரு.

கரு கலைப்பு பிரச்சினை

கரு கலைப்பு பிரச்சினை

இதேபோல குழந்தையின் கருவை கலைப்பது தொடர்பான கதைகள் காலையில் தொடங்கி இரவு வரை கருவை கலைப்பது தொடர்பான கதைகளும் சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பாகின்றன.

குடும்பத்தை கெடுத்தல்

குடும்பத்தை கெடுத்தல்

கூடவே இருந்து குடும்பத்தை கெடுக்கும் கதையும், நாத்தனார் திருமணத்தை நிறுத்தும் கதைகளும் தொடர்ந்து ஒளிபரப்பினாலும் அதை பார்த்து பார்த்து சன் டிவியை நம்பர் ஒன் சேனலாக உயர்த்தியுள்ளனர் ரசிக மகா ஜனங்கள்.

English summary
In most of the Tamil TV serials bygamy is dominating. The trend continues in Most of Tamil TV serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil