TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
மாடர்ன் டிரஸ்ஸுக்கு திரும்பிய யாஷிகா.. இது சரியில்லையே பிக் பாஸ்!

சென்னை: யாஷிகாவின் சேலை கட்டும் டாஸ்க்கை சத்தமில்லாமல் பிக் பாஸ் முடித்து வைத்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு வெவ்வேறு விதமான டாஸ்க்குகள் லக்சரி பட்ஜெட்டிற்காக வழங்கப்படும். அந்தவகையில் கடந்த வாரம் போன் பூத் என்ற டாஸ்க் அளிக்கப்பட்டது.
அதன்படி, போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் தரும் டாஸ்க்குகளை நிறைவேற்ற வேண்டும்.
ஜனனிக்காக மொட்டை:
இதன்படி ஜனனிக்காக பாலாஜி மொட்டை போட்டுக் கொண்டார். செண்டுவுக்காக ஐஸ் முடியை வெட்டிக் கொண்டார். ரித்விகா கையில் நிரந்தர டாட்டூ போட்டுக் கொண்டார். ஜனனி தனது புருவத்திற்கு பிளீச் செய்து கொண்டார்.
யாஷிகாவின் டாஸ்க்:
அதன்படி பாலாஜியைக் காப்பாற்றுவதற்காக யாஷிகாவிற்கு வித்தியாசமான டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. அதாவது, அவர் தனது மேக்கப் பொருட்கள் மற்றும் மாடர்ன் உடைகள் அனைத்தையும் பிக் பாஸிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக பிக் பாஸ் தரும் சேலையை மட்டும் அவர் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான்.
நோ மேக்கப்:
மற்றவர்களுக்கெல்லாம் கொடுத்த டாஸ்க்கைவிட இது மிகவும் எளிமையானது என்ற சலசலப்பு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்ல, வெளியிலும் இருந்தது. தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மேக்கப் இல்லாமல் பிக் பாஸ் கொடுத்த சேலையுடன் வலம் வந்தார் யாஷிகா.
கோரிக்கை:
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல் சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தனர். அப்போது ஆரவ், யாஷிகாவைப் பார்த்து, ‘காரைக்குடி பெண் போலிருக்கிறார்' என வர்ணித்தார். கூடவே அவரது மேக்கப் பொருட்களைத் திரும்பத் தந்துவிடும்படி பிக் பாஸிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.
பிக் பாஸ் அனுமதி:
அது தன்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் கோரிக்கை என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக சத்தமில்லாமல் தற்போது யாஷிகாவின் உடையை மட்டும் மாற்றும் அனுமதியை தற்போது பிக் பாஸ் தந்துள்ளார். நேற்று முன்தினம் முதல் அவர் மீண்டும் டிசர்ட்டும், பேண்ட்டும் அணியத் தொடங்கியுள்ளார்.
அதிருப்தி:
இதைப் பார்த்த மக்கள், பிக் பாஸ் ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த போன் பூத் டாஸ்க்கை செய்ய முடியாது என மும்தாஜ் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால், யாஷிகாவோ சம்மதித்து டாஸ்க்கை மேற்கொண்டவர், தற்போது சத்தமில்லாமல் பின் வாங்கியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.