Just In
- 23 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 35 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி உறவில் உங்களின் உண்மையான 'தேவை' என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க: நீங்க எதிர்பார்த்த ஆள் வெளியேற்றப்பட்டார்
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று யார் வெளியேற வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்பினார்களோ அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா இருந்த வரை அவரை பஜாரி என்றார்கள் பார்வையாளர்கள். அவர் வெளியேற்றப்பட்ட பிறகு மீரா மிதுனை பஜாரி என்று அழைத்தார்கள். சக போட்டியாளர்களுடன் மீராவுக்கு செட்டே ஆகவில்லை.
அவர் எதற்கெடுத்தாலும் சீன் போடுவதும், கோப்பட்டு கத்துவதும் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மீரா
இயக்குநர் சேரன் வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அவரிடம் மீரா மிதுன் நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களையும் கோபம் அடைய செய்தது. பிக் பாஸ் தயவு செய்து இந்த மீராவை முதலில் விரட்டிவிட்டு மறுவேலையை பாருங்களேன் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

பிக் பாஸ்
எப்பொழுதுமே பார்வையாளர்கள் எதிர்பார்க்காததை செய்வதும், அவர்களை ஏமாற்றி வேடிக்கை பார்ப்பதும் பிக் பாஸுக்கு பிடித்தமான விளையாட்டு. ஆனால் மீரா மிதுன் விஷயத்தில் பார்வையாளர்களை திருப்திபடுத்துவது என்று பிக் பாஸ் முடிவு செய்துவிட்டார். ஆம், பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொய்
மீரா மிதுன் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அது உண்மை இல்லை என்று கூறுப்படுகிறது. நேற்று திடீர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரகசிய அறை பற்றி பேச்சு கிளம்பிய நிலையில் இந்த புகைப்படம் வெளியானதால் பார்வையாளர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. பிக் பாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்த வேகத்தில் வனிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மீராவை தேடியும் போலீஸ் வந்ததால் அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் ஏற்கனவே நினைத்தது போன்று நடந்துவிட்டது.

கவின்
மீரா மிதுன் போன்ற விஷத்தை எல்லாம் ரகசிய அறையில் வைக்கக் கூடாது என்கிறார்கள் பார்வையாளர்கள். சக போட்டியாளர்களின் குணம் பற்றி தெரியாமல் இருக்கும் கடலை பார்ட்டி கவினை தான் ரகசிய அறையில் வைக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் கவினை ரகசிய அறைக்கு அனுப்பி விட்டால் யாரை வைத்து காதல் டிராக்கை ஓட்டுவது பாஸ்?