Bigg Boss 3 லாஸ்லியா ஆர்மியே, அந்த புள்ள ஜெயிக்கணும்னா இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 6: losliya Army: சதிஷ் வெளியிட்ட விடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெற வேண்டும் என்றால் அவரின் ஆர்மிக்காரர்கள் ஒரு விஷயத்தை உடனே செய்ய வேண்டும்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இலங்கை பெண்ணாக இருந்தாலும் நம் வீட்டு பெண்ணாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Bigg Boss 3: Losliya army, please do this for her

கமல் ஹாஸன் முன்பு அவர் பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை செய்தி வாசிப்பது போன்று வாசித்து பிக் பாஸ் செய்திகளுக்காக லாஸ்லியா மரியநேசன் என்று கூறிய அழகை பார்த்தே அவருக்கு மேலும் பல ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். கடந்த சீசனில் ரித்விகா எப்படி வம்பு தும்பு எதற்கும் போகாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தாரோ அதே போன்று உள்ளார் லாஸ்லியா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்படியே லாஸ்லியா ரித்விகா மாதிரி இருந்து காரியம் சாதித்தாலும் அதில் தவறு இல்லை. பிக் பாஸே இந்தியில் இருந்து பல காட்சிகளை காப்பியடிக்கிறார். அப்படி இருக்கும்போது முன்னாள் போட்டியாளரின் ஸ்ட்ராடஜியை லாஸ்லியா காப்பியடித்தாலும் தப்பில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி செய்யும் காரியத்தை பார்த்தால் தான் அவரை பிடித்தவர்களுக்கு கூட பிடிக்காமல் போய்விடும் போன்று.

லாஸ்லியா ஆர்மி போடும் ட்வீட்டுகளை தொடர்ந்து பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சி சேனல் பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டால் உடனே அங்கே சென்று லாஸ்லியா அழகு, க்யூட் என்று அதையே திரும்பத் திரும்பக் கூறி கமெண்ட் போட்டு கடுப்பேற்றுகிறது லாஸ்லியா ஆர்மி.

அதை பார்க்கும் நெட்டிசன்களோ, மிக்சர் மாமியை பற்றி பேச வேறு எதுவும் இல்லை என்பதை லாஸ்லியா ஆர்மியே ஒப்புக் கொண்டுள்ளது என்கிறார்கள். நெட்டிசன்களை கடுப்பேற்றுவது போதாது என்று அவ்வப்போது ஓவியா ஆர்மியை வேறு வம்புக்கு இழுக்கிறது லாஸ்லியா ஆர்மி.

எப்பொழுது பார்த்தாலும் லாஸ்லியாவின் அழகை புகழ்ந்து ட்வீட் போடுவதை அவரின் ஆர்மி நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது. மேலும் பல ஆதரவாளர்கள் கிடைப்பார்கள். ஒரு ஆள் பார்க்க கியூட்டாக இருப்பதற்காக எல்லாம் பிக் பாஸ் டைட்டிலை கொடுத்துவிட மாட்டார்கள் என்பதை லாஸ்லியா ஆர்மி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே மீம்ஸ் போட்டுவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X