எவிக்சனுக்கு பிறகு ரேஷ்மா போட்ட முதல்பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்.. எப்டியெல்லாம் திட்டி இருக்காங்க!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக வெளியேறிய நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Reshma is Back to House : மீண்டும் வீட்டிற்குள் நுழையும் Reshma

சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ரேஷ்மா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் நடுநிலையாளராக இருந்து வந்தவர் நடிகை ரேஷ்மா. சேரனோடு பிறந்தநாள் அன்று ஏற்பட்ட மோதலைத் தவிர, அவர் வேறு எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக நேற்று வெளியேறினார் ரேஷ்மா. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே ரேஷ்மா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல் கூறியுள்ளார். பிக் பாஸ் வரலாற்றிலேயே இது ஒரு சாதனை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் மக்களிடம் ரேஷ்மாவுக்கு உள்ள ஆதரவு தெரிய வந்தது.

நன்றி சொன்ன ரேஷ்மா:

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததும் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. அதில் அவர், 'இப்படி ஒரு வாய்ப்பைத் தந்த விஜய் டிவிக்கு மிக்க நன்றி. இது ஒரு அற்புதமான பயணம். நிறைய அன்பு மற்றும் மரியாதையைச் சம்பாதித்திருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்:

ஏற்கனவே ரேஷ்மாவின் கதையைக் கேட்டு, அவரது தைரியத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர் நேற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, அவர்கள் விஜய் டிவியைத் திட்டி வருகின்றனர். அதோடு, ‘உங்களது எவிக்சன் நியாயமற்றது. கடவுள் வேறு ஏதோ பெரிய வாய்ப்புகளை உங்களுக்கு வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். வாழ்த்துகள்' என கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

அதிர்ச்சி:

இதே போல், ‘இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நியாயமே இல்லாத எவிக்சன் இது. உங்களுக்குத் தான் நான் வாக்களித்தேன். இது நடந்திருக்கக் கூடாது. உங்களுடைய எவிக்சன் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது ரேஷ்மா. கால் இறுதிச்சுற்று வரையிலாவது நீங்கள் அந்த வீட்டில் இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். அதற்கு தகுதியானவர் தான் நீங்கள். ஆனால், முன்கூட்டியே நீங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது நியாயமில்லை' எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸுக்கு திட்டு:

பிக் பாஸுக்கு திட்டு:

இந்த வாரம் எப்படியும் சாக்‌ஷி தான் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு பதில் ரேஷ்மாவை வெளியேற்றியதால் மக்களுக்கு கோபமும் ஏற்பட்டுள்ளது. ‘விஜய் டிவியும், பிக் பாஸும் எடுத்த மோசமான முடிவு இது. எப்போதுமே அவர்கள் இப்படித்தான் பண்ணுகிறார்கள். மக்கள் சொல்வதை எப்போதுமே செய்வதில்லை. நீங்கள் மிகவும் நன்றாக விளையாடினீர்கள். சாக்‌ஷி தான் வெளியேறியிருக்க வேண்டும்' என விஜய் டிவியை அவர்கள் தொடர்ந்து திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X