காதல், மோதல், கோஷ்டி, வெறுப்பு, சூழ்ச்சி..முழு சந்திரமுகியாக மாறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது 3 நாட்கள் முடியவில்லை, அதற்குள் அனைத்துவிதமான சூழ்ச்சி வலைகளும் பின்ன ஆரம்பித்துவிட்டது.

காதல், மோதல், சூழ்ச்சி, வஞ்சகம், கோஷ்டி என முழு சந்திரமுகியாக மாற ஆரம்பித்துவிட்டனர் போட்டியாளர்கள்

ஒருவரை குறிவைத்து ஒரு குழுவாக இயங்குபவர்கள் மறுகணம் தனித்தனியாக தங்களுக்குள் மோதி பிரிந்தது எந்த பிக்பாஸ் போட்டியிலும் காணமுடியாத ஒன்று.

 உளவியலை வெளிப்படுத்தும் பிக்பாஸ் வீடு

உளவியலை வெளிப்படுத்தும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீடு ஒரு உளவியல் பட்டறை. இங்கு செலிபிரிட்டிகளாக ஒரீரு நாள் சீன் போடுபவர்கள் பின்னர் நாள் செல்ல செல்லகேமராவை மறந்து தங்கள் இயல்பான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இதில் ஆரம்பத்தில் எவ்வளவு நல்லப்பொண்ணு, எவ்வளவு நல்லப்பையன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போட்டியாளர், போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்பதுபோல் மாறுவார்கள். சிலர் அடச்சே இவரைப்போய் தப்பாக நினைத்தோமே என நம்மை கலங்க வைப்பார்கள்.

 போன சீசனைவிட வேகமாக உருவாகும் கோஷ்டிகள்

போன சீசனைவிட வேகமாக உருவாகும் கோஷ்டிகள்

சிலர் எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பார்கள், சிலர் பிரச்சினையை அவர்கள் தான் உருவாக்குவார்கள். இதுபோன்ற பல ரகங்கள் உண்டு. இதில் என்ன விசேஷம் என்றால் மற்ற சீசன்களில் குறைந்தது 10 நாட்களாவது அவரவர் புத்தியைக்காண்பிக்க ஆகும். ஆனால் இந்த சீசனில் முதலிரண்டு நாட்களிலேயே ஆரம்பித்துவிட்டது. அவரவர் எப்படிப்பட்டவர்கள் என பலரிடம் வெளிப்படாவிட்டாலும் சிலரிடம் அது உடனடியாக வெளிப்பட்டு விட்டது.

 அனுபவமின்மை கோபம் வெடித்து சிதறுகிறது

அனுபவமின்மை கோபம் வெடித்து சிதறுகிறது

முக்கியமாக பெண் போட்டியாளர்களிடம். அதிலும் 3 இளம்பெண்கள் தங்கள் சுயரூபத்தை உடனடியாக காட்ட அதற்கு உடனிருக்கும் சில ஆண்போட்டியாளர்களும் உடன்பட எப்பா கடந்த சீசன்களில் இதுபோன்ற அன்பு டீமிடம் சிக்கி அசிங்கப்பட்டவர்கள் பற்றி தெரிந்துமா? நீங்கள் சிக்குகிறீர்கள் என்று கேட்கத்தோன்றுகிறது. வீட்டுக்குள் அனைவரிடமும் ஒரு நல்ல நட்பு உருவானாலும் ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி டீம் சூழ்ச்சிக்கார டீம் போல் காட்சியளிப்பதை காணமுடிகிறது.

 பெண் தலைவரின் தலைமையை சகிக்க முடியாத பெண்கள்

பெண் தலைவரின் தலைமையை சகிக்க முடியாத பெண்கள்

முக்கியமாக அவர்களால் கிச்சன் டீமுக்கு தலைமைத்தாங்கும் பெண் தலைவர் (இவர் பொது ஜனம் மூலமாக வந்தவர்) ஷிவின் கணேசனுக்கு எதிராக கூடி என்னென்ன செய்யலாம் என பேசினார்கள். சாதாரண விஷயம் டாஸ்க்கில் இருந்ததால் கிச்சன் டீம் சாப்பாடு போட 5 நிமிடம் தாமதமானதால் அதை டீம் லீடரின் தவறாக மாற்றி அவரை கார்னர் செய்வதற்கான அனைத்து பாயிண்டுகளையும் பேசினர். பின்னர் மற்ற வெஸ்ஸல் டீம் உறுப்பினர்கள் ஜி.பி.முத்து, மணிகண்டன் இருவரையும் அழைத்து வந்து பேசி குழுவாக கலாய்ப்பது பற்றி பேசினர். ஆனால் அது ரிவ்யூ கூட்டத்தில் நடக்கவில்லை.

 ஒரு நபருக்கு எதிராக கோஷ்டி சேர்ந்த 3 பெண்கள்

ஒரு நபருக்கு எதிராக கோஷ்டி சேர்ந்த 3 பெண்கள்

இவர்கள் இப்படி கோஷ்டியாக சேர்ந்து பேசுவதையும், ஒரு நபருக்கு எதிராக குழுவாக சேர்வதையும் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிட்டதுதான் வேடிக்கை. இதனால் இவர்களுக்கு ஓட்டு குறையும் கடந்த காலத்தில் இதுபோன்று குழுவாக செயல்பட்ட பாவனி, உள்ளிட்ட 3 பெண்களில் 2 பேர் அட்ரஸ் இல்லாமல் போனார்கள் என்பது பற்றியும் இவர்கள் அறியவில்லை. மற்றொருபுறம் இரு இடங்களில் லேசாக ஊடல், கூடல் ஆரம்பித்துள்ளது. அது வளருமா வீழுமா தெரியவில்லை. இதேபோல் நட்புக்குள்ளும் துரோகம் போல் ஜனனி ஆயிஷாவை குழுவிலிருந்து ஸ்வாப் செய்தது ஆயிஷாவால் சகித்துக்கொள்ள முடியாஅமல் இரவு முழுவதும் வாதம் ஓடிக்கொண்டிருந்தது.

 அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கவனிக்கிறார்கள்

அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கவனிக்கிறார்கள்

இதுபோல் காதல், மோதல், துரோகம், சூழ்ச்சி, கோஷ்டி என போட்டியாளர்கள் முழு சந்திரமுகியாக மாறுவதால் பிக்பாஸ் வீடு புதுக்கலவையாக மாறி வருகிறது. இதை வாசகர்கள் கவனித்து வருகிறார்கள். இதற்கான பலனும் வருங்காலங்களில் மக்களிடமிருந்து வாக்குகளாக மாறும்போது புரிந்துக்கொள்வார்கள். இதற்கு நடுவில் பொறுமையாக சாந்தி, மாஸ்டர் போன்றவர்கள் செயல்படுவது அவர்களின் அனுபவ முதிர்ச்சியையும், ஜி.பி.முத்து போன்றோர், சிறிய பெண்களின் பேச்சைக்கேட்டு அவர்கள் சொல்படி நடப்பதும் பின்னர் நியாயம் தெரிந்து தடுமாறுவதையும் மக்கள் கவனித்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X