»   »  பிக்பாஸ் 9... டிகாங்கானாவை வெளியேறியதால் தற்கொலைக்கு முயன்ற ரசிகை!

பிக்பாஸ் 9... டிகாங்கானாவை வெளியேறியதால் தற்கொலைக்கு முயன்ற ரசிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியிலிருந்து நடிகை டிகாங்கானா சூர்யவன்ஷி வெளியேறியதால் அவரது ரசிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

டிகாங்கானா பிரபல தொலைக்காட்சி நடிகை. சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய 'பிக் பாஸ் 9' வீட்டுக்குள்ளிருந்து டிகாங்கானாவை நடுவர்கள் வெளியேற்றிவிட்டனர். பார்வையாளர்களின் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் தவறிவிட்டனர்.

Bigg Boss 9: Digangana’s fan attempts suicide after her eviction

இதனால் டிகாங்கானாவை விட, பங்களாதேஷைச் சேர்ந்த ஆலியா கான் என்ற அவரது ரசிகை மிகவும் மனமுடைந்து போனாராம். உடனடியாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விஷயம் அறிந்ததும் உடனடியாக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து டிகாங்கானா கூறுகையில், "ஆலியா கான் நலமடைய பிரார்த்திப்போம். இப்போது அவரது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் நியாயமற்ற முடிவால், தான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேன் என அவர் சமூக வலைத் தளத்தில் எழுதியுள்ளார். அதனால்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிக்பாஸ் 9 என்பது ஒரு சாதாரண விளையாட்டுதான். அதை இப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பிக்பாஸ் 9 வீட்டிலிருந்து நான் கண்ணியமாக வெளியேறினேன். என் ரசிகர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ," என்றார்.

English summary
A Bangladeshi fan of Digangana Suryavanshi attempted to commit suicide after the TV actor was evicted from the Bigg Boss 9 house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil