ரெக்கார்டு டான்சர் ரம்யா ஜோவை ரவுண்டு கட்டுறாங்க.. மழையில் அரை நிர்வாணமாக ஆட்டம் போட்ட திவாகர்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நல்லாவே பிக் அப் ஆகிவிட்டது. மற்ற விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு பிரசாந்த் ரங்கசாமி முதல் பலரும் பிக் பாஸ் பக்கம் திரும்பி விட்டனர். வீட்டுக்குள் தர்பூசணி திவாகரை போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே வெளியேற்ற ரவுண்டு கட்டிவிட்டதாக அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பொங்கி வர அவரோ மழையில் அரை நிர்வாணமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

தெரியாத்தனமா பிக் பாஸ் வச்சு பார்த்தது என் தப்பா? இப்போ கண் கெட்டுப்போச்சு என ஏகப்பட்ட நெட்டிசன்கள் பிக் பாஸ் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Bigg Boss 9 Diwakar shirtless rain dance and Ramya Jo stage dance videos getting roasted

இன்னொரு பக்கம் ரம்யா ஜோ எவ்வளவு மோசமானவர் தெரியுமா, ஆரம்பத்தில் தனக்கு யாருமே இல்லை, அனைவரிடமும் அமர்ந்து சாப்பிடவே பிக் பாஸுக்கு வந்தேன் என ரீல் விட்ட ரம்யா ஜோ இப்போ எப்படி சண்டை போடுகிறார் பாருங்க, வெளியேவே நடுவிரல் எல்லாம் காட்டி மோசமாக சண்டை போட்டவர் தான் என நெட்டிசன்கள் அவரது ரெக்கார்டு டான்ஸ் வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.

மழையில் நனைந்த தர்பூசணி: வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் மழையில் சட்டை, பனியன் என எதுவுமே போடாமல் அரை நிர்வாணமாக நனைந்தபடி ஆட்டம் போடு கண் கூசும் காட்சிகள் எல்லாம் இந்த சீசனில் அரங்கேறி வருகிறது. வெளியே நீச்சல் குளம், உள்ளே லக்சரி ஜக்குஸி என கவர்ச்சியை கூட்ட பல விஷயங்களை இந்த சீசனில் இறக்கியுள்ளனர். பெண் போட்டியாளர்கள் எல்லாம் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து உள்ளாடை எல்லாம் அப்பட்டமாக தெரியும் விதமாக ரொம்பவே மோசமாக பிக் பாஸ் சென்றுக் கொண்டிருப்பதாகவும் இந்தி பிக் பாஸை பலூன் அக்கா, ரெக்கார்டு டான்ஸ் அக்கா இருக்கும் இந்த பிக் பாஸ் மிஞ்சிவிடும் என்கின்றனர்.

மிடில் ஃபிங்கர் காட்டிய ரம்யா ஜோ: ரெக்கார்டு டான்ஸராக திருவிழா மேடைகளில் கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த ரம்யா ஜோ இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக இறங்கியுள்ளார். ஏற்கனவே தாமரை செல்வி தெருக்கூத்து நடிகை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், அவர் சீரியல் நடிகையாகவும் இன்ஃப்ளூயன்சராகவும் செட்டில் ஆகிவிட்டார். அதே ரேஞ்சுக்கு ரம்யா ஜோ வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆரம்பத்திலேயே ரவுடி போல பிக் பாஸ் வீட்டில் அவரது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் என்றும் வெளியே அவர் ஒரு நிகழ்ச்சியில் ஆபாச செய்கை செய்த இளைஞருக்கு மிடில் ஃபிங்கரை காட்டி மிரட்டிய வீடியோக்களை ஷேர் செய்து இதுதான் இவரது பிஹேவியர் என ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ரம்யா vs திவாகர்: திவாகரிடம் நான் உன்னை விட அதிகமா சம்பாதிக்கிறேன் என ரம்யா ஜோ சொன்னார். அவர் எப்படி ஆடி சம்பாதிக்கிறார் என பாருங்க என அவர் ஸ்டேஜில் கவர்ச்சி உடையில் போட்ட குத்தாட்ட வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து ரம்யா ஜோவை ரவுண்டு கட்டி வருகின்றனர். இந்த சீசனில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ என்கிற அச்சமும் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X