BB9 Contestants List: இயக்குநர் முதல் இன்ஸ்டா பிரபலம் வரை.. பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நிலையில், போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச பட்டியல் கடந்த சில வாரங்களாகவே வெளியாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள சின்னத்திரை மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். செல்போன் டிவி, வெளியுலக தொடர்பு
இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கி அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை செய்து, தங்களின் உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் ஆரம்பத்தில் திரையில் நாம் பார்த்து வியந்த நடிகர்கள் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் குவிந்தார்கள். சண்டை, காதல், கண்ணீர், கோவம், கொண்டாட்டம், என அனைத்தும் கலந்த நிகழ்ச்சியாக இருக்கும்.

Bigg Boss tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் 8வது சீசனில் விலகியதால், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். 8வது சீசன் வெற்றிகரகமாக முடிந்த நிலையில், 9-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில் கடந்த சில மாதமாக கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் தகவல் கசிந்து வந்த நிலையில், தற்போது கன்பார்ம் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி,ஸ்டென்டப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், குக் வித் கோமாளி கனி திரு,வாட்டர் மெலன் திவாகர், விஜே பார்வதி, வி.ஜே.ஷோபனா, பிரவீன்ராஜ் தேவசகாயம், நடிகை மாலினி ஜீவரத்தினம், நடிகர் சபரிநாதன், வியனா, இயக்குநர் பிரவீன் காந்தி, கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி அப்சரா சி.ஜே, வினோத்பாபு, ஜனனி அசோக்குமார், வைஷாலி கேம்கர், ரோஷன், ரம்யாஜூ, மஞ்சுநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். சர்ச்சைக்கு பெயர் வாட்டர் மெலன் திவாகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் இணையவாசிகள் இணையத்தில் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











