TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
பிக் பாஸ் வீட்டிற்கு ஆரவ் வந்தது ‘இந்த’ முக்கியமான வேலைக்காகத் தான்!

சென்னை: பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளரான ஆரவ் நாயகனாக நடித்துள்ள 'ராஜ பீமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இதற்கு முன்னர் ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த போதும், பிக் பாஸ் தான் ஆரவிற்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
பிக் பாஸ் வெற்றியாளராக பட்டத்தை தட்டிச் சென்ற ஆரவ் தற்போது சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
ஆரவ் வருகை:
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 வீட்டிற்கு விருந்தினராக கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார் ஆரவ். ஏற்கனவே சினேகன், வையாபுரி, காயத்ரி, ஆரத்தி, சுஜா என முதல் சீசன் போட்டியாளர்கள் அங்கு சென்றிருப்பதால், ஆரவ்வும் போட்டியாளர்களை மகிழ்விப்பதற்காகவே அங்கு சென்றிருக்கிறார் என மக்கள் கருதினர்.
மருத்துவ முத்தம்:
அவரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து, தானும் டாஸ்க்கில் கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கினார். மறக்காமல் பாலாஜிக்கு மருத்துவ முத்தமும் கொடுத்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நேரத்தை பிக் பாஸ் அறிவித்தார்.
ராஜபீமா:
அப்போது தான் தெரிந்தது பிக் பாஸ் வீட்டிற்கு ஆரவ் ஏன் வந்தார் என்று. பிக் பாஸ் வீட்டில் வைத்து ஆரவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு 'ராஜபீமா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் சந்தோஷ் நரேஷ் இப்படத்தை இயக்குகிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் யானையுடன் ஆரவ் உள்ளார்.
நன்றி:
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ``இது எனக்கு முக்கியமான நாள். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இது நிச்சயம் நல்ல படமாக இருக்குமென நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். ஆரவ் படத்தின் பெயர் பிக் பாஸ் வீட்டில் வைத்து வெளியிடப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.