Bigg Boss: கல்யாணம் வேஸ்ட்.. புடிச்சவங்க கூட வாழுங்க.. பிரவீன் காந்தி அட்வைஸ் கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. வழக்கமாக இரண்டு, மூன்று வாரத்திற்கு பிறகு தான் வீட்டிற்குள் சண்டை வாரும். ஆனால், இந்த எபிசோடில் சண்டை போட்டால் தான், நல்ல ரீச் கிடைக்கும் என தெரிந்து கொண்டு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று ஆளு ஆளுக்கு சண்டை போட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 போட்டியாளர்கள் நுழைந்து இருக்கிறார்கள், இதில் பாதிக்கும் மேல் சோஷியல் மீடியா மூலம் பிரபலங்கள் தான். இந்த வார நாமினேஷனில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன் இயக்குநர் பிரவீன் காந்தி ஆகியோர் உள்ளனர். வீட்டிற்குள் பெரும்பாலானோர 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகரை டார்கெட் செய்தும், அவரை கேலி செய்தும் விளையாடி வருகிறார்கள். என்னத்தான் பலர் அவரை டார்கெட் செய்தாலும், அவர் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடி வருகிறார். இதனால், அவர் வெளியேற வாய்ப்பு குறைவு தான்.

பிக் பாஸ் சீசன் 9: இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், நந்தினி தானாகவே முன்வந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். நேற்று சக போட்டியாளர்கள் நந்தினி எப்போதுமே சிரித்துக் கொண்டே இருப்பதாக கிண்டல் செய்து பேசினார்கள். இதனால், நந்தினி கதறி அழுது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அனைவரையும் ஒரு வழியாக்கிவிட்டார். அதன்பின், கனி அவரை சமாதானப்படுத்தினார். இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வராமல் இருந்த நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் என்னால் இருக்க முடியாது, நான் வெளியேறுகிறேன் என கூறியதால், பிக்பாஸ் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

Bigg Boss tamil 9 Praveen Gandhi 9

மட்டமான அட்வைஸ்: இப்படி அடுத்தடுத்த சண்டைகளுடன் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் பிக் பாஸ் வீட்டில், பிரவீன் காந்தி கூறிய கருத்து இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, நான் தான் இந்த வீட்டில் பெரியவன் நான் அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயர்களில் பொண்டாட்டி பேர்ல சொத்தை எழுதாதீங்க நான், சொல்றது கோல்டன் வார்த்தை இல்ல டைமண்ட் வார்த்தை. ஒரு புருஷன் பொண்டாட்டி பெயரில் சொத்தை எழுதி வைத்தால், எப்போ வேண்டுமானாலும் அவன் கஷ்டப்படுவான். ஏனென்றால், பொண்டாட்டி பசங்க கூட சேர்ந்துவிடுவாள், அதனால், பொண்டாட்டியா இருந்தாலும், புள்ளையா இருந்தாலும் நம்பாதே. அதே மாதிரி கல்யாணம் பண்றதே வேஸ்ட். அதுக்கு புடிச்சவங்க கூட வாழ்ந்துட்டு போகலாம் என ஒரு அட்வைஸை கொடுத்திருக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான இணையவாசிகள், நீ எல்லாம் பெரிய மனுஷனா என்றும், நீ ஒழுங்கா இருந்தா, உன் மனைவியும், பிள்ளையும் ஒழுக்கமா இருப்பாங்க என பலர் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X