Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்ரேஷனா? அவரே போட்ட பதிவு.. பதறிப் போன ரசிகர்கள்.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: மருத்துவமனையில் நோயாளி உடையில் பிக் பாஸ் ஜூலி தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பதற வைத்தது.
ஜூலி உங்களுக்கு என்ன ஆச்சு? நலமாக இருக்கீங்களா? என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் நலம் விசாரித்து வருகின்றனர்.
Lasik எனும் கண் பார்வைக்கான சிகிச்சையை தான் தற்போது பிக் பாஸ் ஜூலி செய்துள்ளார்.
25வது நாளை எட்டிய பீஸ்ட் படம்... இந்திய அளவில் வசூல் சாதனை செய்த விஜய்!

பிக் பாஸ் ஜூலி
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு புரட்சியில் கலந்து கொண்டு கவனத்தை ஈர்த்த மரியானா ஜூலிக்கு பிக் பாஸ் முதல் சீசனில் இடம் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடந்து கொண்ட விதம் மற்றும் அந்த 5 நிமிஷம் வீடியோ டெலிட் ஆகிடுச்சுன்னு குறும்படத்தையே பங்கம் பண்ண ஜூலியை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து கலாய்த்தனர்.

செம ஆக்டிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில சினிமா படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் ஜூலி. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவாக ஜூலி நடித்த படம் சர்ச்சையில் சிக்கி வெளியாகாமலே உள்ளது. ஆனால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் ஜூலி.

குவியும் ட்ரோல்கள்
ஜூலியை பற்றி கிண்டலான ட்ரோல்களும், அவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை கலாய்த்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதை அத்தனையும் நெகட்டிவிட்டியாக பார்க்காமல் தன்னை வளர்த்துக் கொள்ளும் பாசிட்டிவிட்டியாக பார்த்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்டார்.

அதிகரித்த ரசிகர்கள்
பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ஜூலி தனக்கு நேர்ந்த ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினார். மேலும், ஜூலி செய்து வரும் நல்ல விஷயங்கள் குறித்து தாடி பாலாஜி பேசியது அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பலத்தை சமூக வலைதளங்களில் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஜூலிக்கு சர்ஜரி
இந்நிலையில், தனது Lasic Surgery வெற்றிகரமாக முடிந்தது என்றும் அதுபற்றி விசாரித்த ரசிகர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி என மருத்துவமனையில் நோயாளி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை பதற வைத்துள்ளார் பிக் பாஸ் ஜூலி. உங்களுக்கு என்ன ஆச்சு? என்றும் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லேசிக் சிகிச்சை என்றால் என்ன
கண் பார்வை பிரச்சனைக்கு செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சை தான் LASIC. (Laser-Assisted In Situ Keratomilensis) என்பதன் சுருக்கம் தான் LASIC. கண்ணாடி மற்றும் லென்ஸ் போட்டுக் கொள்ளாமல் பார்வை கோளாறு பிரச்சனையை இதன் மூலம் சரி செய்துக் கொள்ள முடியும். தற்போது அந்த சிகிச்சையைத் தான் ஜூலி செய்துள்ளார். மற்றபடி பயப்படும்படி ஜூலிக்கு ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.