அரோரா உடம்பு மணக்குது.. ரூட்டுவிட்ட திவாகர்.. யாராவது இவங்களை கண்ட்ரோல் பண்ணுங்க..கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: அக்டோபர் ஐந்தாம் தேதியை தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடி எடுத்துவைத்துள்ளது. இதில், முதல் வாரத்திலேயே நந்தினி, இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று சொல்லி வீட்டில் இருந்து தானாக வெளியேறினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். தற்போது, பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் இருக்கின்றனர்

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலூன் அக்கா என்ற பெயரை போக்குவதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தேன் என்று சொன்ன அரோரா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லையா என, இணையவாசிகள் திட்டம் அளவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள்ள அலப்பறை செய்து வருகிறார் அரோரா.

Bigg Boss season 9 Diwakar Aurora Sinclair
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அரோராவிற்கும் துஷாராவுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இருவரும் வெளியில் சென்றதும் டேட்டிங்கில் போகலாம் என்று பேசிக்கொண்டனர். இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், எப்போதுமே இருவரும் கையை பிடித்துக் கொண்டும், நெருக்கமாக அமர்ந்து பல கதைகளை பேசி வருகின்றனர். அது மட்டுமில்லாமல்,ரெண்டு நாளைக்கு முன், துஷாரா உங்காந்து இருக்க, அவரின் காலடியில் அமர்ந்து இருந்த அரோகா 'இந்த வீவ் எப்படி இருக்கு என இரட்டை அர்த்தத்தில் கேட்டார். உடனே துஷாரா கொழுப்பா என கேட்க, அப்படியே பேச்சை மாற்றிய அரோரா நீச்சல் குளத்தை பற்றி கேட்டேன் என்றார்.

யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க: அதைத்தொடர்ந்து துஷாரா, ம்ம்ம்.. அழகா இருக்கு.. ஆனால்,சின்னதா இருக்கு என்று சொன்னார். அதைக் கேட்ட அரோரா... என்னடா... சின்னதா இருக்கா என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். இப்படி இவர்கள் இருவரும் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்தது. அரோரா, துஷாராவிடம் மட்டுமில்ல கம்முருதின், கலையரசன், திவாகர் என யாராக இருந்தாலும் அவர்களிடம் இப்படித்தான் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி பலரும் அரோராவை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கப்பா என கூறிவருகின்றனர்.

உடம்பு மணக்குது: இப்படி நாளுக்கு நாள் அரோராவோட அட்டகாசம் சென்று கொண்டு இருக்கும் நிலையில், திவாகர், வந்ததில் இருந்து அரோரா பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தார். நேற்று அனைவரும் பரபரப்பாக கேம் விளையாடிக்கொண்டு இருக்க, திவாகர் மட்டும் அரோராவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அரோரா என்ன என்று கேட்க, உன் உடம்பு மணமணனு மணக்குது என்றார். அதோடு விடாமல், விளையாடிக்கொண்டிருந்த பார்வதியிடம், ஏய் பார்வதி, அரோ உடம்பு முழுக்க மணக்குது, நீ வேணா பக்கத்துல வந்து உட்கார்ந்து பாரு என்று சொல்ல, கடுப்பான பார்வதி, உன் ரூட்டு கிட்ட நீ என்ன வேணாலும் பண்ணுப்பா.. என்ன இதுல இழுத்தாதே என கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதெல்லாம் என்ன பேச்சு என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று இருந்த மரியாதையே போச்சு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: diwakar திவாகர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X