ஆதிரை.. குதிரை.. வக்கிரம் பிடித்த விக்கல்ஸ் விக்ரம்.. தம்பின்னு பாராட்டும் அந்த பிரபல நடிகர்.. வொர்ஸ்ட்!
சென்னை: பார்க்க அப்படியே கொரியன் போல இருக்கும் துஷார் இந்த சீசனின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நிலையில், அவர் போட்டியாளரான ஆதிரையை ஆதிரை.. குதிரை என அழைத்தார். பெண்களை குதிரை என்று அழைப்பதே தவறான விஷயம் என பலரும் பொளந்துக் கட்டி வரும் நிலையில், அதை மேலும் வில்லங்கமான கேவலமான வார்த்தையாக மாற்றும் வகையில் விக்கல்ஸ் விக்ரம் பேசியதற்கு கடும் எதிர்ப்பு சோஷியல் மீடியாவில் கிளம்பியுள்ளது.
சோஷியல் மீடியாவில் பலரை கேலி மற்றும் கிண்டல் செய்து பாப்புலரானவர் தான் இந்த விக்கல்ஸ் விக்ரம். ஸ்டாண்ட் அப் காமெடியனான இவர் வெளிநாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட ஷோக்களை செய்துள்ளார். விக்கல்ஸ் சேனல் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமான இவர் லேடி கெட்டப் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்குள் செய்யும் அலப்பறையை ஏகப்பட்ட ரசிகர்கள் ரசித்த நிலையில், பிரபலமாகி விட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே விக்கல்ஸ் விக்ரம் ஸ்டைலில் போட்ட வீடியோ இவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதுகுறித்து பிக் பாஸ் சீசன் 9ன் கிராண்ட் லாஞ்ச் மேடையில் விஜய் சேதுபதியிடமே தெரிவித்திருந்தார்.
ஸ்டாண்ட் அப் காமெடியன்: ஐடி கம்பெனிகள், பிரைவேட் செக்டார் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட ஸ்டாண்ட அப் காமெடியன்கள் வாய்க்கு வந்ததை ஆன் தி ஸ்பாட்டில் அனைவரையும் சிரிக்க வைக்கும் விதமாக பேசி கைதட்டல்களை அள்ளி வருகின்றனர். ஸ்டாண்ட் அப் காமெடியன்களின் காமெடிகள் சில இடங்களில் சிலருக்கு எரிச்சல்களையும் கொடுத்து விடும். டைமிங் பிடிக்கிறேன் என ஏடாகூடமாக பேசுவது, ஆபாச வசனங்களை அசால்ட்டாக பேசுவது என எல்லை மீறி வருகின்றனர். பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான விக்கல்ஸ் விக்ரம் பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக உள்ளே களமிறங்கியுள்ளார். யாருடா இவர் இவ்ளோ பெரிய சைஸா இருக்காரே என நெட்டிசன்கள் ஆரம்பத்திலேயே பாடி ஷேமிங் செய்ய ஆரம்பித்த நிலையில், தற்போது அவர் பேசிய வார்த்தை காரணமாக பலரும் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆதிரை.. குதிரை: இந்த சீசனில் கொரியன் போட்டியாளர் போல துஷாரை பிக் பாஸ் வீட்டில் களமிறக்கியுள்ளனர். அவர் பெண் போட்டியாளரான ஆதிரையை ஆதிரை குதிரை என கலாய்த்து பேசிய நிலையில், "குதிரை குதிரை.. யாரும் பதறாதீங்க.. என வக்கிரம் பிடித்த எண்ணத்துடன் நெடில் வார்த்தையை பயன்படுத்தி துஷார் சொன்னது போல ஒரு பிம்பத்தை பெண்கள் மத்தியில் பேசிய விக்கல்ஸ் விக்ரமை பலரும் விளாசி வருகின்றனர். இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பல அடல்ட் கன்டென்ட் போட்டியாளர்கள் தான் உள்ளதாகவும் குழந்தைகளை தயவு செய்து பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை பார்க்க வைக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தம்பி விக்ரம்: விக்ரம் வேதா முதல் டிரெண்டிங் வரை பல படங்களில் நடித்துள்ள நடிகர் பிரேம் குமார் விக்கல்ஸ் விக்ரம் உடன் எடுத்துக் கொண்ட பல போட்டோக்களை பதிவிட்டு "வாழ்த்துகள் தம்பி.. எப்போதும் போல கலக்கு என பதிவிட்டுள்ளார். விக்கல்ஸ் விக்ரம் சிறுவனாக இருந்ததில் இருந்தே பிரேம்குமார் உடன் இருக்கும் விக்கல்ஸ் விக்ரம் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











