»   »  கமலின் பிக் பாஸ் வீட்டிற்கு அனுயா, ஓவியா, நமீதா எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்...

கமலின் பிக் பாஸ் வீட்டிற்கு அனுயா, ஓவியா, நமீதா எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிற்குள் 15 நட்சத்திரங்கள் குடிபுகுந்து விட்டனர். இவர்கள் 14 பேரையும் கண்காணிக்கப் போகிறார் பிக்பாஸ் கமல் ஹாசன். ஒவ்வொருவரையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வீட்டிற்குள் அனுப்பிவைத்துள்ளார் கமல்.

14 பிரபலங்கள் என்றார்கள். 15வதாக நமீதா பிக்பாஸ் குடும்பத்திற்குள் வந்தது அனைவருக்கும் சர்ப்ரைஸ். இந்த 15 பேரும் ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப் போகிறார்கள்.

மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னையின் புறநகரில் உள்ள ஈவிபி தீம் பார்க்கில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட வீட்டிற்குள் நட்சத்திரங்கள்

பிரம்மாண்ட வீட்டிற்குள் நட்சத்திரங்கள்

நடிகர்கள் ஸ்ரீ, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், சினேகன், சக்தி வாசு, கஞ்சாகருப்பு, ஆரார், பரணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ளனர்.

அனுயா, ஓவியா

அனுயா, ஓவியா

அனுயா, ஆர்த்தி கணேஷ், ரெய்ஷா, காயத்ரி ரகுராம், ஓவியா, நமீதா ஆகிய நடிகைகளுடன் ஜல்லிக்கட்டு போராளி ஜூலினாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ளார்.

நமீதாவின் சர்ப்ரைஸ் விசிட்

நமீதாவின் சர்ப்ரைஸ் விசிட்

பிக்பாஸ் வீட்டிற்குள் யார் யார் குடியேறப்போகிறார்களோ என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. அரசியல்வாதிகள் பெயரெல்லாம் அடிபட்டது. ஆனால் எதிர்பாராத ஒரு நபர் நமீதா வந்தது திடீர் சர்ப்ரைஸ்தான்.

மூன்றாம்பிறை கமல் ரசிகை

மூன்றாம்பிறை கமல் ரசிகை

நமீதாவிடமும் என்ன எதிர்பார்ப்பு என்று வழக்கமான கேள்வியை கேட்டார் கமல். நமீதாவோ, பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு உற்சாகம் அளிக்கும் என்று கூறியதோடு, தான் மூன்றாம் பிறை கமலின் ரசிகை என்றார்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கமல் கூறியுள்ளார். சமைத்து சாப்பிட்டு, பேசி, உறங்கி,அவ்வப்போது சண்டை போட்டு யார் யார் கண்ணீர் விடப்போகிறார்களோ?இன்னும் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பதுதான் சமூக வலைத்தளங்களில் பேச்சாக இருக்கப் போகிறது.

கஞ்சாகருப்பு சமையல்

கஞ்சாகருப்பு சமையல்

பிக் பாஸ் வீட்டிற்குள் வசிப்பவர்கள் தாங்களாகவே சமைத்து சாப்பிட வேண்டமாம். வையாபுரிக்கு உப்புமா செய்யத் தெரியுமாம். அதேபோல கஞ்சா கருப்புக்கு சமைக்கத் தெரியுமாம். நடிகைகள் சமையல் அறைக்குள் என்ன செய்யப் போகிறார்களோ பார்க்கலாம்.

தகவல் தொடர்பற்ற வாழ்க்கை

செல்போன், இணையதளம் எதுவும் இல்லாத தகவல் தொடர்பற்று 100 நாட்கள் இந்த 15 பேரும் வசிக்கப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கட்டித் தழுவிக்கொண்டார்கள். இனி போக போக யார் யாருடன் சண்டை போட்டு அடிதடியில் இறங்கப் போகிறார்களோ? நூறு நாட்களில் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து தாக்குபிடித்து வெற்றி பெறப்போகிறார்களோ பார்க்கலாம்.

English summary
The housemates in Bigg Boss Tamil consists of Actress Oviya,Anuya,aarthi, Gayathri Raguram,and Namitha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil