Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாவனியை விடாத அமீர்.. பிக் பாஸ் ஜோடிகள் 2.. யாருக்கு யார் ஜோடின்னு பாருங்க.. வேறலெவல் புரமோ!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகிறது.
அதுதொடர்பான அசத்தலான புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ராஜு மற்றும் பிரியங்கா ஓப்பனிங் செய்து வைக்கும் இந்த புரமோவில் அமீருக்கு ஜோடியாக பாவனி ஆடுகிறார்.
தாமரைக்கு ஜோடியாக அவரது கணவரே ஆடுகிறார். மேலும், யாருக்கு யார் ஜோடி என்பதை இங்கே பார்ப்போம்..
இன்று ஏகே 61 ஃபர்ஸ்ட்லுக் வருமா....காத்திருக்கும் ரசிகர்கள்...நல்ல வார்த்தை சொல்வாரா போனி கபூர் ?

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனை ரம்யா கிருஷ்ணன், நகுல் நடுவராக இருந்து நடத்தினர். பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், ஜூலி, கேபி, ஆஜித் என பலர் நடனமாடினர். அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஜோடி டைட்டிலை தட்டிச் சென்றனர். வனிதா விஜயகுமார் ரம்யா கிருஷ்ணன் உடன் பிரச்சனை செய்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இரண்டாவது சீசனில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

ராஜு, பிரியங்கா
ராஜு மற்றும் பிரியங்கா ஜோடி போட்டு ஆட போகிறார்களா? அல்லது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், பிக் பாஸ் ஜோடிகள் 2 புரமோவை ஆரம்பித்து வைப்பது இவர்கள் இருவரும் தான். ராஜு மற்றும் பிரியங்காவை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து ஹார்ட்டீன்களை போட்டு வருகின்றனர். இருவரும் இணைந்து ஆடினால் வேறலெவலில் இருக்கும்.

யாருக்கு யார் ஜோடி
வேல்முருகன் - இசைவாணி ஒரு ஜோடி, ஐக்கி பெர்ரி - தேவ், அபிஷேக் - சுருதி, பாவனி - அமீர், ஹாரதி - கணேஷ், சுஜா - சிவகுமார், தாமரை - பார்த்தசாரதி மற்றும் இவர்களுடன் டேனி உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் என்கிற அசத்தலான புரமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த சீசனுக்கும் ரம்யா கிருஷ்ணன், நகுல் நடுவர்களாக இருப்பார்களா? அல்லது புதிய நடுவர்கள் வருவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

பாவனியை விடமாட்டார் போல
பிக் பாஸ் சீசன் 5ல் பாவனி ரெட்டி பின்னாடி சுற்றிக் கொண்டிருந்த அமீர், விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கும் அவருடனே சேர்ந்து சுற்றி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பாவனி ரெட்டியும் அமீரும் ஜோடியாக இணைந்து நடனமாட உள்ள நிலையில், இந்த ஜோடி தான் வெற்றி பெறும் என்றும் பாவனியை விட மாட்டார் போல அமீர் என கமெண்ட்டுகளை ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

அபிநய், நிரூப் எங்கே
தாமரை செல்விக்கு பிக் பாஸ் விட்டு வெளியே வரும் எண்ணமே இல்லை போல என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும், அபிநய், நிரூப், அக்ஷரா, வருண் எல்லாம் எங்கே பாஸ் என கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் மே 8ம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.