Vijay TV: அது ஸ்கிரிப்ட் தான்.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து பேசிய மோகன் வைத்தியா..

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு சன் டிவிதான் பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால், ரியாலிட்டி ஷோக்களுக்கு விஜய் டிவியைச் சொல்லலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் ஸ்க்ரிப்ட்டா இல்லை, அதில் கலந்து கொண்டுள்ளவர்கள் அவர்களாகவே பேசுவதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இப்படி இருக்கும்போது, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சிசன் 3 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோகன் வைத்தியா கலாட்டா பிங்க் சேனலுக்கு அண்மையில் தனது ஹோம் டூர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தனது குடும்பம் குறித்து ஏற்கனவே அளித்திருந்த பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது தனது மனைவி வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. தனது மகனும் தனது மனைவியைப் போலவே மாற்றுத்திறனாளி. அதேபோல், மருமகளும் மாற்றுத்திறனாளி என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது ஹோம் டூரில், தான் தற்போது வசிப்பது வாடகை வீடு என்றும், தனக்குச் சொந்த வீடு இருக்கிறது. சொந்த வீடு திருமுல்லைவாயிலில் உள்ளது. இந்த வீட்டிற்கு மாதம் ரூபாய் 12 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த ஹோம் டூரில், " இதுவரை வந்த பிக் பாஸ் சீசன்களிலேயே எங்கள் சீசன் தான் பெஸ்ட். எங்கள் சீசனில் அன்பு, கோபம், காதல், அஃபக்‌ஷன் என அனைத்தும் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் ஸ்கிரிப்ட் என்று கூறுகிறார்கள். ஆனால் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் கிடையாது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் தான். குக் வித் கோமாளியில் நாங்கள் செய்யும் அனைத்தும் ஸ்கிரிப்ட் தான். அதைப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். உங்களைப் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறோம். அந்த நிகழ்ச்சியை பார்த்து நீங்கள் அனைவரும் ஜாலியாக சிரியுங்கள்.

Bigg Boss Mohan vaithiya Shares Some Intresting Fact About Vijay tv Bigg Boss And Cook With Comali
Photo Credit:

தோனியுடன் செல்பி: பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அனுபவம். அதேபோல் தோனி தயாரித்த படமான எல்.ஜி.எம் படத்தில் நான் நடித்திருந்தேன். படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், தோனியை மேடையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் இந்தியில் பேசினேன். அதன் பின்னர் நான் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ஹோம் டூர்: மோகன் வைத்தியா கடந்த 1997ஆம் ஆண்டு முதல் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்துக் கொண்டு உள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் தொடங்கி, குணச்சித்திர கதாபாத்திரங்கள் வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். அவரது இந்த ஹோம் டூர் பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X