Don't Miss!
- News
பாஜகனா அட்வைஸ் தரலாமா? சிடி ரவிக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி.. ட்விட்டரில் கிளம்பிய மோதல்
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அமீரை காதலிப்பது நிஜமா?.. பிடிக்கும்.. ஆனால்.. பாவனி சொன்ன குட் நியூஸ் !
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி, எனக்கு அமீரை பிடிக்கும் என்று அனைவர் முன்னும் ஒப்பனாக கூறியுள்ளார்.
சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி , தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
விரைவில் சூர்யா 41 ஷுட்டிங்...கன்ஃபார்ம் செய்த சூர்யா...இப்படியா கிளப்பி விடுவீங்க?

பிக் பாஸ்சீசன் 5
பிக் பாஸ்சீசன் 5 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ஷோவுக்குள் நுழைந்ததுமே ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.

ஏராளமான ரசிகர்கள்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் பாவனி.

பிபி ஜோடிகள் 2
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமீரை பிடிக்கும்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிபி ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாவனியிடம் அமீர் காதல் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது. அதில் பாவனி மிகவும் தைரியமாக அமீரை எனக்கு பிடிக்கும் என போல்டாக கூறியுள்ளார். ஆனால்... இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் அமீர் பாவனி காதல் விவகாரம் உண்மை தானா? என ரசிகர்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.