இதுதான் பெயரை மாத்துற லட்சணமா?.. என் ஃபிரெண்டு அரோரா பண்றது எனக்கே அசிங்கமா இருக்கு.. ரியா வேதனை!
சென்னை: பிக் பாஸ் வீடா அல்லது ஓயோ ரூமா என ஒட்டுமொத்த ரசிகர்களும் கழுவி ஊற்றும் அளவுக்கு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி சீரழிந்து கிடப்பதாக அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் தலையே அரோராவுடன் சேர்ந்துக் கொண்டு லவ் டிராக்கில் பயணம் செய்து வந்த நிலையில், அவரே சரி கிடையாது என பிக் பாஸ் மாற்றிவிட்டார்.
துஷாரை பாத்ரூமுக்கு அழைப்பது, கம்ரூதினுக்கு ரூட்டு விடுவது, முதுகில் ஏறிக்கொண்டு சவாரி செய்வது, கட்டிப்பிடித்து கிஸ் அடிப்பது, கண்ட இடத்தில் கை வைப்பது, டபுள் மீனிங் வார்த்தைகளை பேசுவது, செய்கை செய்வது என பலூன் அக்கா வெளியே என்ன பண்ணாரோ அதை பிக் பாஸ் வீட்டிலும் பண்ணி அசிங்கப்படுத்தி வருகிறார் என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நல்லவேளை இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை என்றும் விஜய் சேதுபதி சிக்கிக் கொண்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், பலூன் அக்கா பெயரை மாற்றி அரோரா சின்க்ளேர் என ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என அவரது நெருங்கிய தோழியான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரியா சொன்ன நிலையில், தற்போது அரோராவின் ஆட்டம் அவருக்கே பிடிக்கவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெயர் கெட்டுப் போகும்: பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு ஒன்று புகழ் கூடும் அல்லது பெயர் கெட்டுப் போகும் என்று சொல்வார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெயரையே கெடுத்த போட்டியாளர்களாக அரோரா மற்றும் ஆதிரை மாறியுள்ளனர் என்றும் சீக்கிரமே அவர்களை வெளியேற்றினால் தான் இந்த சீசன் உருப்படும் என பலரும் கூறி வரும் நிலையில், தனது தோழியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார் கடந்த சீசன் வைல்டு கார்டு என்ட்ரியான ரியா.
இதுதான் பெயரை மாத்துற லட்சணமா?: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அரோரா செல்லும் போது அவரது பெயரை மாற்ற வேண்டும் என நீங்க தானே சொன்னீங்க, இப்போ உங்க ஃபிரெண்டை பத்தி பேசுங்க என பிக் பாஸ் விமர்சனம் செய்து வரும் ரியாவிடம் நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்த நிலையில், அவங்க பெயரை மாத்த வேண்டும் என நான் தான் நினைத்தேன். ஆனால், அவள் உள்ளே சென்றதும் அங்கே தனக்கு பிடித்ததை தான் செய்வேன் என்றாள். அவங்களோட ஆக்ஷன்ஸ் எனக்கு பயங்கர ஏமாற்றமாக உள்ளது. அது எனக்கு புரியவும் இல்லை, புடிக்கவும் இல்லை என வெளுத்து வாங்கியுள்ளார்.
தோழி பத்தி தப்பா பேசமாட்டேன்: அரோரா சின்க்ளேர் என்கிற பெயர் பலருக்கும் தெரிந்தாலே நல்ல மாற்றம் தான் என நினைத்தேன். ஆனால், அவர் நடந்துக் கொள்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என் அருகே அவள் இருந்தா மச்சான் இதெல்லாம் சரி கிடையாது என சொல்லியிருப்பேன். ஆனால், இப்போ அவ உள்ளே விளையாடுறா. மேலும், என் தோழி பத்தி என்னால ஆன்லைன்ல கமெண்ட் அடிக்க முடியாது. அவ வந்தா நேர்லயே சொல்வேன் என பேசியுள்ளார் ரியா. தோழி பற்றி தப்பா பேசமாட்டேன் என சொல்லிவிட்டு அவரை பற்றி எல்லாமே சொல்லிட்டீயேம்மா ரியா என அரோராவின் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











