உண்மைதான் நம்புங்க... பிக் பாஸ் சீசன் 5... வேறலெவல் அப்டேட் !
சென்னை : அதிக ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் லோகோ அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழில் 4 சீசன் முடிந்து, 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
தமிழில், விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெயர் குறித்த, அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்து சீசன் 5 மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

பெரும் வரவேற்பு
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் தொடங்குவதற்கு முன்பும், போட்டியாளர்களாக கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் வெளியாகி வைரலாகும். தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் பட்டியல் என ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பல டாஸ்க்குகள்
சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு பல டாஸ்க்குகள் கொடுக்கப்படும். விதிமுறைகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் இருந்து டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து 5-ம் சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.5வது சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால், இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் போதுதான் அது மிகவும் சுவாரசியதாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வந்த நிலையில், இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியானது.

கொரோனாவால் தாமதம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், பிக் பாஸ் சீசன் 5 புரோமோ ஷூட்டிங் நடந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உறுதியாகவில்லை
அந்த பட்டியலில், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், நடிகர் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, லட்சுமி ராமகிருஷ்ணன், செய்தி வாசிப்பாளர் கண்மணி, டிக் டாக் ஜி.பி. முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர் அடிபடுகின்றன. ஆனால், போட்டியாளர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாக வில்லை. உறுதியா தகவல் வெளியான பிறகே யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் தெரியவரும்.

லோகோ வெளியாக உள்ளது
இதற்கிடையே, பிக் பாஸ் இல்லத்தில் இன்டீரியல் டெக்ரேஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீசன் 4ல் இடம் பெற்றது போல பல வண்ணத்தில் இல்லத்தை ஜொலிக்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த சீசனில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பார்வையாளர்கள் வீடியோ மூலம் அனுமதிக்கப்பட்டனர். அதே போல இந்த முறையில் பார்வையாளர்கள் வீடியோவில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

புது லோகோ
மேலும், ஆகஸ்ட் 27ந்தேதி மாலை 6மணிக்கு பிக் பாஸ் சீசன்5 லோகோ வெளியாக இருப்பதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஏகத்திற்கு குஷியாகி உள்ளனர். பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ, ஃபோட்டோ, போட்டியாளர்கள் பட்டியல் என பல விதமான தகவல்கள் இணையத்தை கலக்கி வந்தாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பிடம் இருந்தோ, விஜய் டிவி தரப்பிடம் இருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











