Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்த தர்ஷன்.. பெரும் மனவருத்தத்தில் லாஸ்லியா.. அசர வைக்கும் பாசமலர்கள்!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டன் பதவியை லாஸ்லியாவுக்காக விட்டுகொடுத்திருக்கிறார் தர்ஷன்.
சேரன் நேற்று ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்ட பிறகு, பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்? எனும் பதற்றம் ஆடியன்ஸ் மத்தியில் நிலவுகிறது.
கடந்த வாரம் தலையணை டாஸ்கை சரியாக செய்யாததால் கவின் நேரடியாக நாமினேஷனுக்கு சென்றுவிட்டார்.
சிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே!

புதிய ஆப்ரேஷன்
கடந்த வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேரன் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவரை ரகசிய அறையில் தங்கவைத்து, புதிய ஆப்ரேஷன் ஒன்றை துவக்கி இருக்கிறார் பிக் பாஸ். இதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது ஓரிரு நாளில் தெரியும்.

கேப்டன் டாஸ்க்
இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் புரொமோவில் வனிதா, லாஸ்லியா, தர்ஷன் இடையே கேப்டன் பதவிக்கான போட்டி நடக்கிறது. அதில் மூவரும் உள்ளங்கைகளில் தலா 2 பவுல்களை வைத்துக்கொண்டு அரைமண்டியில் நிற்க வேண்டும். யார் அதிக நேரம் நிற்கிறார்களோ அவரே இந்த வார கேப்டன்.

விலகிய தர்ஷன், வனிதா
இந்த போட்டியில் இருந்து முதலில் விலகிக் கொள்கிறார் வனிதா. அவரை தொடர்ந்து தர்ஷனும் விலகுகிறார். யாரும் தியாகம் செய்து தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்கிறார் லாஸ்லியா. இது தர்ஷனின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2வது புரொமோ
இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தது ஏன் என தர்ஷனிடன் லாஸ்லியா கேட்கிறார். அதற்கு, தான் சேஃப்பாக இருப்பதாகவும், லாஸ்லியா கேப்டனாக இருந்து தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தர்ஷன் பதிலளிக்கிறார்.

மறுக்கும் லாஸ்லியா
ஆனால் இப்படி விட்டுக்கொடுத்து வரும் கேப்டன் பதவி தனக்கு வேண்டாம் என்கிறார் லாஸ்லியா. இதனால் இந்த வார கேப்டனாக லாஸ்லியா நியமிக்கப்படுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் கேப்டனாகிவிட்டால், இந்த வாரம் சேஃப்பாகிவிடுவார்.

2வது முறையாக தர்ஷன்
ஏற்கனவே அபிக்காக ஒருமுறை கேப்டன் பதவியை தர்ஷன் விட்டுக் கொடுத்தார். அதேபோல், மதுவுக்காக சாண்டியும் ஒருமுறை விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் தர்ஷன் இப்போது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வாரம் வீட்டிலுள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள்.

லாஸ்லியா
அவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. ஒருவேளை தர்ஷன் நாமினேசனுக்கு வந்தாலும், அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். அவர் வெளியேறப் போவதில்லை. ஆனால் லாஸ்லியா நிலைமை அப்படியில்லை. கடந்த சில வாரங்களாக அவர் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வருகிறார்.

பாராட்டு
எனவே, அவரை எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும் என்ற சகோதரப் பாசத்தில் தர்ஷன் இப்போது கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா இருவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் தான். அதோடு கடந்த வாரம் லாஸ்லியா நாமினேசனில் இருந்தார். தற்போது அதனை சரி செய்து கொள்ளும் வகையில் அவரைக் காப்பாற்றி பொறுப்பான அண்ணனாக பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.