For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வழக்கம் போல் வம்பிழுத்த வனிதா.. சரியாக பதிலடி கொடுத்த லாஸ்லியா.. கிழி கிழி கிழி..!

  |
  Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 72 : Vanitha is Back

  சென்னை: வம்புக்கு இழுத்த வனிதாவுக்கு லாஸ்லியா சரியான பதிலடி கொடுத்தற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  பிக் பாஸ் வீட்டில் வனிதாவின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழாயடி சண்டைகள்கூட பராயில்லை என சொல்லும் அளவுக்கு அவரால் சண்டை, சச்சரவுகள் அதிகரித்து வருகிறது.

  திங்கட்கிழமை எபிசோடில் ஓப்பன் நாமினேஷனின் போது கவினையும், சாண்டியையும் வாண்டடாக வம்புக்கு இழுத்து அலப்பறையை கூட்டினார். இதனால் கடந்த ஒரு வாரமாக கலை பண்பாட்டு மையம் போல் காட்சியளித்த பிக் பாஸ் வீடு மீண்டும் கலவர பூமியானது.

  'லாஸ்லியாவுக்கு இலங்கையில் ஒரு காதலர் இருக்கிறார்... பெயர் தர்ஷன்'.. வெளியான அதிர்ச்சி தகவல்..! 'லாஸ்லியாவுக்கு இலங்கையில் ஒரு காதலர் இருக்கிறார்... பெயர் தர்ஷன்'.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

  கொட்டு வைத்த பிக் பாஸ்

  கொட்டு வைத்த பிக் பாஸ்

  நேற்றைய எபிசோடிலும் இந்த பிரச்சினையை தொடர்ந்தார் வனிதா. மைக்கை கழட்டி வைத்துவிட்டு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடினார். பிறகு கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் ரைடு விட்டதை தொடர்ந்து அமைதியானார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் மீண்டும் டாஸ்க்குகள் தொடங்கின.

  தலையணை டாஸ்க்

  தலையணை டாஸ்க்

  ஹவுஸ்மேட்ஸ்க்கு நேற்று தலையணை தயாரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. வனிதா, ஷெரின், சேரன், தர்ஷன் ஆகியோர் ஒரு அணியாகவும், கவின், லாஸ்லியா, சாண்டி, முகென் ஒரு அணியாகவும் பிரிந்து இந்த டாஸ்க்கை விளையாடினர். எதிர் அணிகளின் தலையணைகளைப் பரிசோதிக்கும் வேலை லாஸ்லியாவுக்கும், வனிதாவுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

  தலையணை பிரச்சினை

  தலையணை பிரச்சினை

  அப்போது எதிரணியின் பெரும்பாலான தலையணைகளை சரியில்லை என ஒதுக்கித் தள்ளினார் லாஸ்லியா. இதனால் வனிதா கடுப்பானார். பதிலுக்கு அவரும் இந்த அணியின் தலையணைகளை குற்றம் சொன்னார். கூடவே வழக்கம் போல் தன் பாணியில் அனைவரையும் ஜாடை மாடையாக பேசினார்.

  வனிதா புயல்

  வனிதா புயல்

  இதில் முதலில் சிக்கியது கவின் தான். பின்னர் லாஸ்லியா பக்கம் வனிதா புயல் திசை திரும்பியது. லாஸ்லியாவைப் பார்த்து சந்திரமுகி புகுந்திடுச்சு என கலாய்த்தார். இதனால் ஆத்திரமடைந்த லாஸ்லியா பதிலுக்கு வனிதாவிடம் எகிறினார்.

  வம்புக்கு இழுத்த வனிதா

  வம்புக்கு இழுத்த வனிதா

  அப்போது, ‘எல்லாத்தையும் வெளில இருந்து பார்த்துட்டு தான் வந்திருக்கேன். நீ என்னைப் பத்தி என்னவெல்லாம் பேசினனு எனக்குத் தெரியும்' என எல்லோரிடமும் சொல்வது போல் லாஸ்லியாவிடமும் வனிதா கூறினார். பெரும்பாலும் வனிதா இப்படிக் கூறும் போது, மற்ற போட்டியாளர்கள் அடங்கிப் போய் விடுவது தான் வழக்கம்.

  சரியான பதிலடி

  சரியான பதிலடி

  ஆனால், லாஸ்லியா அப்படிச் செய்யவில்லை. ‘நான் என்ன அப்டி உங்களப் பத்தி கதைச்சேன். சொல்லுங்க?' என தில்லாக எதிர்கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியால் நிச்சயம் வனிதா ஆடிப் போய் தான் இருக்க வேண்டும். ‘நீயும் வெளில போய் பார்த்துக்க' என மழுப்பலாக பதிலளித்தார்.

  லாஸ்லியா கேட்ட கேள்வி

  லாஸ்லியா கேட்ட கேள்வி

  அதற்கு, ‘எதுக்கு வெளில போய் பார்க்கணும். நான் உங்க முன்னாடி இங்க தானே இருக்கேன். இப்போ என்கிட்ட நேராவே கேளுங்களேன். உங்களவிட இங்க வேற யாரும் எதுவும் பேசிடலை' என பதிலடி கொடுத்தார். இந்தக் காட்சியைப் பார்த்து லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘அசிங்கப் பட்டான்டா ஆட்டோக்காரன்' என வனிதாவை அவர்கள் கேலி செய்து வருகின்றனர்.

  இது முதல்முறையல்ல

  இது முதல்முறையல்ல

  லாஸ்லியா இப்படி வனிதாவை எதிர்த்துப் பேசுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே பலமுறை சண்டைகளில் நறுக் சுருக்கென தனது கருத்துக்களை எடுத்து வீசியிருக்கிறார். வீண் வம்புக்குச் செல்வதில்லை. தன்னை வம்புக்கு இழுப்பவர்களை விடுவதில்லை. லாஸ்லியாவிடம் பிடித்ததே இந்த குணம் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  வனிதாவை எதிர்க்கும் துணிச்சல்

  வனிதாவை எதிர்க்கும் துணிச்சல்

  பிக் பாஸ் வீட்டிலேயே வனிதாவை எதிர்த்து கேட்கும் துணிச்சல் மிக்கவர்கள் தர்ஷன், கவின் மற்றும் லாஸ்லியா தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் வனிதாவிடம் பொட்டிப் பாம்பாய் அடங்கி விடும் போது, இவர்கள் மட்டும் தான் எதிர்த்துக் கேள்வி கேட்கின்றனர்.

  English summary
  The fans are appreciating Losliya for her brave counter to Vanitha in a row in yesterday's episode in Bigg boss tamil 3.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X