For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஷத்தை கக்கத் தயாராகும் சாக்‌ஷி.. உனக்கு என்ன வில்லன் அவார்டா கொடுக்க போறாங்க? செம கடுப்பில் மக்கள்

  |
  Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றை புரொமோ குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினர்களாக சென்றுள்ளனர். சாக்ஷிக்கும், கவினுக்கும் ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுப்பிடித்துள்ளது.

  எனவே இன்றைய எபிசோடில் பரபரப்பாக விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய முதல் புரொமோவும் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது. இந்த புரொமோ குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

  வனிதா கெத்துதான்... இல்லாட்டி அவரே அழைத்து பேசி சமாதானப்படுத்தியிருப்பாரா!வனிதா கெத்துதான்... இல்லாட்டி அவரே அழைத்து பேசி சமாதானப்படுத்தியிருப்பாரா!

  வில்லன் அவார்ட்

  'பார்.. முழுசாக விஷத்தை கக்க தயாராக காத்திருக்கும் சாக்ஷியை பார்' என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள இந்த ரசிகர், "யார் இவரா.. இவங்களுக்கு அழ மட்டும் தான் தெரியும். வேற ஒண்ணும் பண்ண மாட்டாங்க. சும்மா கோவமாக முகத்தை வெச்சுக்கிட்டா வில்லன் அவார்ட் கொடுத்துடுவாங்களா?" என கூறியுள்ளார்.

  ஃபுல் பீக்ல நைனா

  "சாண்டி: நைனா ஃபுல் பீக்ல இருக்காரு போல.. தர்ஷன்: இருக்காதா பின்ன.. பசக் பசக்குன்னு குத்தி அனுப்பினா", என புரொமோவில் சாண்டியும், தர்ஷனும் பேசுவதை ஹைலைட் செய்துள்ளார் இவர்.

  ஜூலி மாதிரியே

  "முதல் சீசனில் பதவி கிடைச்சதும் ஜூலி ஒரு ஆட்டம் போட்டுச்சே. அதே மாதிரி தான் இப்போ லாஸ்லியா ஒரு ஆட்டம் போடுது", என இவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கமெண்ட்டுக்கும் இந்த புரொமோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் சொல்றது நேற்றைய எபிசோட் பற்றி. பாவம் அவரும் எங்க தான் போய் புலம்ப முடியும். அதான் இங்க வந்து கொட்டிட்டாரு.

  குருநாதா டிசர்ட்

  நேற்றைய எபிசோடில் பாய்ஸ் கேங்கில் உள்ள அனைவரும் ஒரே மாதிரியான டிசர்ட் அணிந்திருந்தனர். அந்த டிசர்ட்டில், சாண்டி அடிக்கடி உச்சரிக்கும் குருநாதா எனும் வாசகம் இருந்தது. இதை குறிப்பிட்டு படம் போட்டு கேள்வி கேட்டுள்ளார் இந்த ரசிகர். " என்னாது இது.. தேவையில்லாத விளம்பரம்" என கமெண்ட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், சாண்டியின் புகழை பரப்ப வேண்டும் என்பதறக்காக அவரது மனைவி செய்த வேலை இது என எழுதப்பட்டுள்ளது.

  ஷெரினின் நாடகம்

  "ஷெரின் அது எப்படி முகென் உங்களை ஆரம்பத்துல நாமினேஷன் பண்ணதுக்காக இப்ப வரையும் அவரை காரணமே இல்லமா எல்லா விசயத்திலும் நாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. அது கூட பரவா இல்லை. ஆனா உங்களை யாரும் நாமினேஷன் பண்ண கூடாதுனு எல்லார் கூடையும் நடிக்குறீங்களே ஒரு டிராமா. அடேங்கப்பா", என இவர் தெரிவித்துள்ளார்.

  English summary
  The fans are commenting that Sakshi can do nothing other than crying after watching today's first promo of Bigg boss tamil 3.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X