For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷெரினுக்கு ஓவர் டார்ச்சர்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவின்.. செம கடுப்பில் லாஸ்லியா!

  |
  Bigg Boss 3Tamil unseen: Losliya moment

  சென்னை: லாஸ்லியாவை வெறுப்பேற்றும் வகையில் ஷெரினிடம் கடந்த இரண்டு நாட்களாக ஓவராக விளையாண்டு வருகிறார் கவின்.

  பிக் பாஸ் சீசன் 3 முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இனி வரும் வாரங்களில் இது மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அவர்களில் லாஸ்லியா மற்றும் ஷெரின் இருவர் மட்டுமே பெண் போட்டியாளர்கள். ஏற்கனவே கவினும், லாஸ்லியாவும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த சில நாட்களாக ஷெரினிடம் எல்லை மீறி பழகி வருகிறார் கவின்.

  காலையிலேயே முதுகில் மூட்டையைக்கட்டி ஓடவிடும் பிக்பாஸ்.. விழுந்து வாரும் ஹவுஸ்மேட்ஸ்!காலையிலேயே முதுகில் மூட்டையைக்கட்டி ஓடவிடும் பிக்பாஸ்.. விழுந்து வாரும் ஹவுஸ்மேட்ஸ்!

  காதல் மன்னன்

  காதல் மன்னன்

  பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போதே காதல் ஸ்ட்ராடஜியுடன் தான் கவின் வந்தார். ஆனால் அதுவே அவருக்கு வினையாகிப் போனது. சாக்‌ஷியைக் காதலித்து ஏமாற்றியதாகவும், லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து அவரது ரசிகர்களின் வாக்குகளையும் பெற முயற்சிப்பதாகவும் கவின் மீது குற்றச்சாட்டு உள்ளது.

  வாக்குறுதி

  வாக்குறுதி

  கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கவினின் நண்பர் பிரதீப், அவரைக் கன்னத்தில் அறைந்து ஒழுங்காக விளையாடும்படி வலியுறுத்தினார். எனவே, இறுதிக்கட்டத்தில் உள்ள கவின் தனது திறமையை நிரூபிக்க ஒழுங்காக விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கமலிடம் கூட அதே வாக்குறுதியை கவின் அளித்தார்.

  மீண்டும் சர்ச்சை

  மீண்டும் சர்ச்சை

  பலூன் டாஸ்க்கில் முதல் ஆளாக வெளியேறிய கவின், நேற்றைய பளுதூக்கும் டாஸ்க்கில் இறுதி வரை போராடியது பாராட்டும்படி இருந்தது. ஆனால், மீண்டும் அவர் காதல் சர்ச்சைகளில் சிக்கி விடுவாரோ என அச்சப்படும்படி உள்ளது ஷெரினுடனான அவரது தற்போதைய நடவடிக்கைகள்.

  ஷெரின்

  ஷெரின்

  கடந்த சில நாட்களாக ஷெரினுடன் அவர் ஓவராக விளையாடி வருகிறார். முதலில் லாஸ்லியாவும் இதனை விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டார். ‘நீ இப்டி பண்றது நல்லாயிருக்கு கவின். இதே மாதிரி ஜாலியாப் பேசு' என அவர் தான் கவினிடம் கூறினார்.

  விடாமல் துரத்தல்

  விடாமல் துரத்தல்

  ஆனால் நேற்று ஷெரினிடம் கவின் நடந்து கொண்ட விதத்தை லாஸ்லியாவே ரசிக்கவில்லை என்பது அப்பட்டமாக அவரது முக ரியாக்‌ஷன்கள் மூலமே தெரிந்தது. கவினும், ஷெரினும் ஒரே தட்டில் சாப்பிட்டனர், ஷெரினை பாத்ரூம் வரை துரத்திச் சென்றார் கவின், ஷெரினை அவர் தொட்டு தொட்டுப் பேசினார்.

  பாத்ரூம் வரை

  பாத்ரூம் வரை

  இவையெல்லாம் லாஸ்லியாவிற்குப் பிடிக்கவில்லை. லாஸ்லியாவிற்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்குமே இந்தக் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. ஷெரினை பாத்ரூம் வரை விடாமல் துரத்திச் சென்றது எல்லாம் ரொம்பவே ஓவர். ஷெரினை குளிக்க விடாமல், இயற்கை உபாதைகளைக் கழிக்க விடாமல் கவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தது நன்றாக இல்லை.

  தவறான உதாரணம்

  தவறான உதாரணம்

  விளையாட்டிற்காக வம்பிழுக்கிறார் என்றாலும், அதிலும் ஒரு எல்லை வேண்டாமா. இப்படியா ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருப்பது. இதுவும் ஒரு வகையில் மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகி விடுமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

  ரசிகர்கள் கவலை

  ரசிகர்கள் கவலை

  திடீரென கவின் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. பிக் பாஸ் ஏதும் ரகசிய டாஸ்க் கொடுத்திருக்கிறாரா இல்லை லாஸ்லியாவை வெறுப்பேற்ற அவர் அப்படி நடந்து கொள்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், எதுவாக இருந்தாலும் டாஸ்க்குகள் மூலம் கிடைத்து வரும் நல்ல பெயரை மீண்டும் கவின் கெடுத்துக் கொள்வாரோ என்ற பயம் அவரது ரசிகர்களிடம் உள்ளது.

  English summary
  In yesterday bigg boss tamil 3 episode, Losliya become jealous after Kavin seen speaking with Losliya continuously.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X