For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லாஸ், பணம், கமல்.. ஒரே கல்லில் பல மாங்காய்.. கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமான முடிவு.. சபாஷ் கவின்

  |
  Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 95 : கவின் வெளியேற்றம் கதறி அழும் சாண்டி

  சென்னை : பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறுவதாக எடுத்த முடிவு மேம்போக்காக பார்த்தால் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரியும். ஆனால் அது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு தான்.

  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்து வெளியேற அதிரடியாக சம்மதம் சொல்லி விட்டார் கவின். நேற்று இரவு எபிசோட்டில் அது ஒளிபரப்பப்பட்டது. இன்றும் அவரது வெளியேற்ற சம்பவங்கள் தான் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இத்தனை நாள் கஷ்டப்பட்டு விட்டு இப்படி கடைசி நேரத்தில் பின் வாங்கி விட்டாரே கவின் என மக்களுக்கு அவர் மீது பரிதாபம் கலந்த கோபம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

  பிரபலம்

  பிரபலம்

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் சரவணன் மீனாட்சி என்ற ஒரு வெற்றி சீரியலில் நடித்த அடையாளத்தை மட்டும் தான் கவின் வைத்திருந்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் பல கடன் பிரச்சினைகளில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். எனவே கடன் பிரச்சினையும் தீரும், மக்களிடையே மேலும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் தான் அவர் பிக் பாஸில் கலந்து கொண்டார்.

  கவின் ஆர்மி

  கவின் ஆர்மி

  அவர் எதிர்பார்த்தது போலவே இந்த நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது கவின் தான். எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போதும், அவருக்காக ஆர்மி தான் சமூகவலைதளங்களில் நிறைந்துள்ளது. விஜய் ஹேஷ்டேக்கையே பின்னுக்குத் தள்ளும் வகையில் கடந்த வாரம் கவின் பற்றிய ஹேஷ்டேக் டிரண்டிங் ஆனது.

  காதல் மன்னன்

  காதல் மன்னன்

  பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் பேசினார், சாக்‌ஷியை காதலித்து ஏமாற்றினார் என்பதைத் தவிர வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் கவின் மீது இல்லை. எந்தப் பெண்ணிடமும் அவர் அத்துமீறினார் என யாரும் புகார் கூறவில்லை. காதல் மன்னன் என்ற டைட்டிலோடு தான் அவர் உலா வந்தார்.

  பணமும் ஒரு காரணம்

  பணமும் ஒரு காரணம்

  எப்படியும் அவர் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டியது தான். நிச்சயம் டைட்டில் கிடைக்க வாய்ப்பு குறைவு தான். எனவே பிக் பாஸில் இருந்து வெளியேறும் முன்பு கிடைத்த வரை பணத்தை சம்பாதித்து விடுவது என அவர் கருதுவதில் தவறில்லை.

  லாஸ்லியா குடும்பம்

  லாஸ்லியா குடும்பம்

  அதோடு ஆரம்பத்தில் இருந்தே தான் டைட்டிலுக்காக விளையாடவில்லை என்பதை கவின் வெளிப்படையாகக் கூறிவிட்டார். எனவே அவர் நினைத்தது போல் அவரது நண்பர்களில் ஒருவர் வெற்றியாளராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு கிளம்பும் நேரத்தில் லாஸ்லியாவிடமும் அவரது அப்பா பற்றி பேசி மக்களிடம் அப்ளாஸ் வாங்கி விட்டார்.

  தேவையில்லா தர்மசங்கடம்

  தேவையில்லா தர்மசங்கடம்

  நிச்சயம் இந்த வாரம் கமல் முன்னிலையில் கவின் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், மேடையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி அவர் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ஆனால், இப்போது அப்படியில்லை. சத்தமில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விடலாம். இதனால் அவரது பெயருக்கும் நல்லது.

  சபாஷ் கவின்

  சபாஷ் கவின்

  பணத்திற்குப் பணம், லாஸ்லியா குடும்பத்திடம் நல்ல பெயர், தேவையில்லாத சர்ச்சைகளில் இருந்து தப்பித்தல் என நன்கு யோசித்து தான் கவின் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதற்காக நிச்சயம் அவருக்கு சபாஷ் சொல்லத்தான் வேண்டும்.

  English summary
  Kavin's decision to go out from bigg boss house with Rs.5 lakhs money is a brilliant move. By this decision he actually escaped from many problem and has created a sympathy on him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X