For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யாக மாறிய கவின்.. ஒரே நாளில் வில்லன் இமேஜ் மாறி ஹீரோ ஆகிட்டாரே!

  |
  Bigg Boss Kavin : சொன்னதை செய்து காட்டிய கவின்-வீடியோ

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் கெட்ட பையன் என பெயர் எடுத்த கவின், ஒரே நாளில் தனது இமேஜை நல்ல பிள்ளையாக மாற்றி விட்டார்.

  ஒரே சமயத்தில் நான்கு பெண்களுக்கு காதல் வலை.. எப்போதும் பெண்களுடன் கடலை விவசாயம்.. எந்த டாஸ்க் கொடுத்தாலும் சரியாக விளையாட மாட்டார்... இது தான் கவினுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயர்.

  சாக்ஷி, லாஸ்லியாவுடன் காதல் கீதம், சேரனுடன் பரமபதம் என கவினின் லீலைகள் தான் பிக் பாஸ் ஹேட்டர்ஸ்க்கு டிவிட்டர் டாக் டைம். கவினின் நடவடிக்கைகளை விமர்சிக்காதவர்களே கிடையாது.

  பிக் பாஸ் மூலம் 'பெற்ற' கடனை அடைத்த கவின்.. முதல் வேலையாக சிறையில் இருந்த தாய்க்கு ஜாமீன்!பிக் பாஸ் மூலம் 'பெற்ற' கடனை அடைத்த கவின்.. முதல் வேலையாக சிறையில் இருந்த தாய்க்கு ஜாமீன்!

  கவின்

  கவின்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புரொமோ வெளியானால் போதும், கவின் மற்றும் லாஸ்லியாவை விளாசுவதற்காக ஒரு கூட்டமே கிளம்பி வந்துவிடும். போதாக்குறைக்கு நண்பர் பிரதீப் ஆண்டனி வேறு பிக் பாஸ் வீட்டிற்கே சென்று கவினுக்கு பொளேர் என ஒரு அறைவிட்டார்.

  கடன்

  கடன்

  இத்தனையையும் தாங்கிக் கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததற்கு காரணம் ஒன்று மட்டும் தான். தனது குடும்பம் பெற்ற கடனை அடைக்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் கவினின் ஒரே நோக்கம், குறிக்கோள் எல்லாம். அதனை அவர் இப்போது அடைந்திருக்கிறார்.

  மாஸ்டர் பிளான்

  மாஸ்டர் பிளான்

  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் திடீரென கவின் வெளியேற என்ன காரணம் என்பது யாருக்குமே விளங்கவில்லை. ஆனால் அது தான் அவரது மாஸ்டர் பிளான். தனக்கு தேவையான பணத்துடன் அவர் வெளியே சென்றிருக்கிறார்.

  அவப்பெயர்

  அவப்பெயர்

  நினைத்தப்படியே தனது குடும்பம் பெற்றக் கடனை அவர் அடைத்துவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பிக் பாஸ் வீட்டில் அவர் சம்பாதித்து விட்டார். சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்துவிட்டார்கள் எனும் அவப்பெயரையும் கவின் துடைத்துவிடத்தான் போகிறார்.

  மீண்டு வந்த கவின்

  மீண்டு வந்த கவின்

  'நட்புன்னா என்னான்னு தெரியுமா' பட வெளியீட்டின் போது கவினை சந்தித்த ஞாபகம் இப்போது வருகிறது. வேட்டையன் எனும் கதாபாத்திரத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர், அடுத்தடுத்த வாய்ப்புகள் சரியாக அமையாததால் உதவி இயக்குனராக வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 'சீக்கிரம் மீண்டு வந்திருவேன் ப்ரோ' என அவர் கூறிய வார்த்தைகள் இப்போது நினைவில் நிற்கிறது.

  வாழ்த்து

  வாழ்த்து

  சொன்னபடியே கடன் பிரச்சினையை சமாளித்து, தாயையும் சிறையில் இருந்து விடுவித்திருக்கிறார். விரைவில் அந்த வழக்கையும் முடித்து விடுவார். ஒரு மிடில் கிளாஸ் இளைஞனுக்கு தான் புரியும் கவினின் உண்மையான மனநிலை. பிக் பாஸ் வீட்டில் வில்லனாக காட்சியளித்த கவின், இப்போது ரியல் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விரைவில் திரையிலும் உயர்வார் என வாழ்த்துவோம்.

  முக்கியத்துவம்

  முக்கியத்துவம்

  மற்ற போட்டியாளர்களைப் போல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேசுகிறேன், மற்ற போட்டியாளர்களின் முகத்திரையை கிழிக்கிறேன் என சமூகவலைதளங்களில் எந்தப் பதிவும் வெளியிடவில்லை கவின். அதற்குப் பதில் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தன் பெற்ற தாயை ஜாமீனில் எடுத்து நல்ல பெயரை எடுத்து விட்டார்.

  பாராட்டு

  பாராட்டு

  ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கவினின் இருந்தபோதே, அவரது நேர்மையான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஆர்மிக்கள் ஆரம்பிக்கப்பட்டன. கவினுக்கு ஆதரவாக அவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வந்தனர். தற்போது வெளியில் வந்தும் கவின் பொறுப்பான இளைஞராக செயல்பட்டிருப்பது அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் கவினை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Bigg boss Kavin's imgae changed from villain to hero now. Whatever he did in the bigg boss house is just for money. Now he utilised the money for this family problems.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X