Don't Miss!
- News
பிரச்சனைக்கு நடுவே.. உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. என்ன நடந்தது?
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வனிதாவின் அடுத்த டார்கெட் தர்ஷன்.. மிஷனை தவிடு பொடியாக்கிய லாஸ்.. இத தாம்மா நாங்க எதிர்பார்க்குறோம்!
சென்னை: வனிதாவின் அடுத்த டார்க்கெட் லாஸ்லியாவும், தர்ஷனும் தான் என்பது புரொமோவைப் பார்க்கும் போதே தெரிகிறது.
பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வனிதா வந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா எனத் தெரிந்த போதே, மக்கள் இனி கண்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காதுப்பா என பேசிக் கொண்டனர். அதனை நிரூபிப்பது போல், தினமும் ஏதாவது ரெண்டு பேருக்கு சண்டையை மூட்டி, செம எண்டர்டெயிண்ட்மெண்ட் கொடுத்து வருகிறார் கண்டண்ட் குயின் வனிதா.
வந்த முதல்நாளே அபிக்கும், முகெனுக்கும் சண்டை மூட்டி விட்டார். ஏறக்குறைய அது கைகலப்பு வரை போகப் பார்த்தது. நேற்று மதுவை தூண்டி விட்டு, கவினுடன் சண்டை போட வைத்தார்.
மீண்டும்
டைம்லைனில்
ஆண்ட்ரியா..
ஆண்
நடிகருடன்
அதீத
நெருக்கம்..
வைரலாகும்
படுக்கையறை
அந்தரங்க
காட்சி!

வனி அக்கா:
அந்தவகையில் இன்று யாரையும் தூண்டி விடாமல் தானே களத்தில் இறங்கி இருக்கிறார் வனி அக்கா. தர்ஷனிடம் நேராகச் சென்று அவரே சண்டை போடுகிறார். ‘நீ ரொம்ப கோபப்படுற' என அவரை கோபப்படுத்துகிறார். லாஸ்லியாவும் கோபப்படுவது இந்தப் புரொமோவில் தெரிகிறது.

விவாதம்:
நிச்சயம் இது ஏதோ டாஸ்க்காகத்தான் இருக்க வேண்டும். காரணம் சிறையில் இருந்து அபியும், கஸ்தூரியும் விடுதலை செய்யப்பட்டு இந்த டாஸ்க்கில் பங்கேற்றுள்ளனர். ஏதோ விவாதம் போல் தெரிகிறது. சேரனும், வனிதாவும் இதற்கு நடுவர்கள் போல.

லாஸ்லியா கோபம்:
ஆனால், வனிதாவே எல்லோரையும் தூண்டி விட்டு சண்டையை உருவாக்குகிறார். கடந்த சில நாட்களாகவே லாஸ்லியாவும் நல்ல சண்டை மோடில் இருக்கிறார். யார் கிடைத்தாலும் கடித்து குதறி விடும் ஆவேசத்துடன் தான் அவர் காணப்படுகிறார். அதுவும் நன்றாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில் வனிதா ஏற்படுத்தும் குழப்பங்களால் அவர் ஏகத்துக்கும் காண்டாகி இருக்கிறார்.

மதுவுடன் சண்டை:
நேற்றைய எபிசோட்டிலேயே மதுவை ஒரு கை பார்த்து விட்டார் லாஸ்லியா. இன்றைய புரொமோ மூலம் அவர் வனிதாவையும் விளாசுகிறார் என்பது தெரிய வருகிறது. பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கியே இருந்த லாஸ்லியா, தற்போது இப்படி அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மிஷன் வனிதா:
நிச்சயம் இன்று இரவு நல்ல எண்டர்டெயின்மெண்ட் இருக்கும் என எதிர்பார்க்கலாம். பிக் பாஸ் வீட்டிலேயே தெளிவாக, மனதில் பட்டதை நறுக்கென சொல்பவர்கள் தர்ஷனும், லாஸ்லியாவும் தான். இன்று அவர்களையே வனிதா சீண்டியிருக்கிறார். மிஷன் லாஸ்லியா என்று கூறி விட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தார். ஆனால் லாஸ்லியாவின் கோபத்தைப் பார்த்தால், அது மிஷன் வனிதா ஆகி விட்டதாகவே தெரிகிறது. பார்க்கலாம் இன்று என்ன நடக்கிறது என.